Primary tabs
உரிமை யாக்கல்.
பொன்போற் சிறந்த சங்கீத சாஸ்திரத்தின் அடிப்படையாய் வழங்கும் சுருதிகளைப் பற்றிய பல சந்தேகங்களை நீக்கித் தமிழ்மக்கள் வழங்கிவந்த இசைத்தமிழின் பல மேற்கோள்களையும் தற்காலத்தில் வழங்கிவரும் அனுபோகங்களையும் திட்டமான அளவையும் விளக்கிக்காட்டி இந்நூலை எழுதி முடிப்பதற்கு வேண்டும் எல்லா நன்மைகளையும் செய்து உதவிய கருணானந்த முனிவருக்கு இந்நூல் உரிமையாக்கப்பெற்றது.
சுருதிகளைப் பற்றிச் சொல்லும் இம்முதல் புத்தகத்திற்கு
“கருணானந்தர் பொற்கடகம்”
என்று பெயர் வழங்கும்.
@@@@@