Primary tabs
இப்புத்தகத்திலடங்கிய சில முக்கிய குறிப்புகள்.
முதல் பாகம். - இப்புத்தகம் நாலுபாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் முதற்பாகம் சங்கீதம் பூர்வகாலத்தில் இயல், இசை, நாடகமென்னும் முத்தமிழில் ஒன்றாயிருந்ததென்பதையும் தமிழ் மொழியின் பூர்வீகத்தையும் தமிழ் நாட்டின் தொன்மையையும் இசைத் தமிழ் வழங்கிய விவரத்தையும் சில இசை வல்லோரையும் பற்றிச் சொல்லும். 280 பக்கங்கள்.
இரண்டாவது பாகம்.- இது ஒரு ஸ்தாயியில் வழங்கும் சுரம் சுருதிகளைப்பற்றிப் பலர் சொல்லும் அபிப்பிராயங்களை ஒத்துப்பார்த்து அவைகள் தற்கால அனுபோகத்திற்கு ஒத்து வராதவையென்று தெளிவுறக் காட்டும். 242 பக்கங்கள்.
மூன்றாம் பாகம். - இது இசைத் தமிழில் வழங்கிவந்த சுரம் சுருதிகள் நுட்ப சுருதிகளையும் பூர்வ காலத்தில் வழங்கிவந்த தமிழ்ப் பண் முறைகளையும், யாழையும், கிரக சுரம் மாற்றுவதையும் பல சக்கரங்களினால் விளங்கக் காட்டும். 255 பக்கங்கள்.
நான்காம் பாகம். - இது ஆயப்பாலையில் உண்டாகும் 12 சுரங்களுக்கும், வட்டப்பாலையிலுண்டாகும் 24 சுருதிகளுக்கும், திரிகோணப்பாலை, சதுரப்பாலைகளில் உண்டாகும் 48, 96 நுட்பமான சுருதிகளுக்கும் லாகரித முறைப்படி கணிதமும் அளவும் சென்ட்ஸும், ஓசையின் அலைகளும் சொல்லுவதோடு நாலு அட்டவணைகளில் அவைகளுக்கு திஷ்டாந்தமும் எடுத்துக்காட்டும்.
இன்னும் பரோடா ஆல் இந்திய மீயூசிக் கான்பரென்ஸில் சுருதிகளைப்பற்றிய விசாரணையும் அதைப்பற்றிச் சில குறிப்புகளும், தஞ்சைவித்யா மகா ஜன சங்கத்தில் சுருதிகளைப்பற்றிய விசாரணையும் அதில் பஞ்சாயத்தாருடைய தீர்மானமும் பிரசிடெண்ட் அவர்களுடைய அபிப்பிராயமும் காணலாம். இன்னும் சங்கீதத்திற்குரிய அநேக முக்கிய குறிப்புகள் அங்கங்கே சொல்லப்படுகின்றன. 421 பக்கங்கள்.
இப்புத்தகத்தில் முகவுரை 20 பக்கங்கள். பொருளடக்கம் 22 பக்கங்கள். அரும்பதவுரை 11 பக்கங்கள். பாயிரம் 69 பக்கங்கள். அனுபந்தம் 19 பக்கங்கள். பிழைதிருத்தத்தில் 4 பக்கங்கள். படங்கள் 12 பக்கங்கள் ஆக 1346 பக்கங்கள்.
6-1914-6-1917.
இப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிற படங்கள்.
பக்கம்.
தஞ்சைச் சங்கீத வித்யா மகா ஜன சங்கத்தின் முதல் கான்பரென்ஸ் படம்
கான்பரென்ஸ் படம்
கான்பரென்ஸ் படம
கான்பரென்ஸ் படம்
படம்
மனுட சரீரத்திற்கும் யாழுக்குமுரிய ஒற்றுமையைக் காட்டும் படம்
பரோடா, திவான்
சாகிப் V.P. மாதவராவ் C.I.E. அவர்கள்
படம்