தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tamil Vilaiyadu


xxviii

தமிழ்நாட்டு விளையாட்டுகள்

விளையாட்டால் ஒருவர்க்கு உடலுரம், உள்ளக்கிளர்ச்சி, மறப்பண்பு, மதிவன்மை, கூட்டுறவுத்திறம், வாழ்நாள் நீட்டிப்பு முதலியன உண்டாகின்றன. இக்காலத்தில் சிலர்க்கு, `கரும்பு தின்னக் கைக்கூலிபோல்' விளையாட்டால் பிழைப்பு வழியும் ஏற்படுகின்றது. நீண்டகாலமாக வாழ்க்கைத் தொழில்வகையாக இருந்துவரும் நாடக நடங்களும், முதற்காலத்தில் விளையாட்டாகத் தோன்றியவையே.
ஒருசில விளையாட்டுகள் உலக முழுமைக்கும் பொதுவேனும், பல விளையாட்டுகள் வெவ்வேறு நாட்டிற்குத் தனிச் சிறப்பூட்டுவன. ஆங்கில ஆட்சி நீங்கித் தமிழாட்சி வரவிருக்கும்போது, வழக்குக் குன்றிய தமிழ்நாட்டு விளையாட்டுகளை நாடு முழுதும் பரப்புவது நல்லதென்று கண்டு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சித்தலைவரும் தூய தமிழருமான திருவாளர் வ. சுப்பையா பிள்ளையவர்களின் விருப்பத்திற்கிணங்கி, இச் சிறு நூலை எழுதலானேன்.
வழக்கற்ற விளையாட்டுகள் இறுதியிற் குறிப்பிடப்பட்டுள்ளன. இந் நூலில் இடம்பெறாத தமிழ்நாட்டு விளையாட்டுகளை எவரேனும் எழுதியனுப்பின், அவை நன்றியறிவொடு அடுத்த பதிப்பிற் சேர்த்துக் கொள்ளப்பெறும்.
சேலம்,
1.12.1954

ஞா.தேவநேயன்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 12:11:35(இந்திய நேரம்)