தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   48


 

"கோட்டங் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்
ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய
திணிநிலை அலறக் கூழை போழ்ந்துதன்
வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி
ஓம்புமின் ஓம்புமின் இவணென ஓம்பாது
தொடர்கொள் யானையிற் குடர்கால் தட்பக்
கன்றமர் கறவை மான
முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே"    (புறம். 275)

படை    அறுத்து    பாழிகொள்ளும் ஏமமும் - கருவியை அறுத்து
மல்லினால் கொள்ளும் ஏமமும்.[அத்தும் ஆனும் சாரியை.]

உதாரணம்

"நீலக் கச்சைப் பூவார் ஆடைப்
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வருங் களிற்றொடு வேல்துரந்து இனியே
தன்னுந் துரக்குவன் போலும் ஒன்னலர்
எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்
கையின் வாங்கித் தழீஇ
மொய்ம்பின் ஊக்கி மெய்க்கொண் டனனே."   (புறம். 274)

களிறு    எறிந்து எதிர்ந்தோர் பாடும் - களிறு எறிந்து எதிர்ந்தோர் பாடும்.

உதாரணம்

"ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்
வம்பலன் போலத் தோன்றும் உதுக்காண்
வேனல் வரியணில் வாலத்து அன்ன
கான ஊகின் கழன்றுகு முதுவி
அரியல் வான்குழல் சுரியல் தங்க
நீரும் புல்லும் ஈயாது உமணர்
யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
வாழா வான்பகடு ஏய்ப்பத் தெறுவர்
பேருயிர் கொள்ளும் மாதோ அதுகண்டு
வெஞ்சின யானை வேந்தனும் இக்களத்து
எஞ்சலிற் சிறந்தது பிறிதொன்று இல்லெனப்
புணர்கொளற்கு அருமை நோக்கி
நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே."         (புறம். 307)

களிற்றொடு   பட்ட  வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும்
அமலையும் - களிற்றுடன் போந்து  மலைந்துபட்ட  இறைவனை  மிக்க
வேந்தன் படையாளர் நெருங்கி மற்றவனைப் பாடும் பாட்டும்.

அமல் - நெருங்கல். அதனாலாய   பாட்டிற்கு  ஏற்புடைத்தாயிற்று.

உதாரணம்

"விழவுவீற் றிருந்த வியலுள் ஆங்கண்
கோடயர் முழவின் முன்னர் ஆடல்
வல்லான் அல்லன் வாழ்கவன் கண்ணி
வலம்படு முரசந் துவைப்ப வாளுயர்த்து
இலங்கு பூணன் பொலங்கொடி உழிஞையன்
மடம்பெரு மையின் உடன்றுமேல் வந்த
வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி
வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே."      (பதிற்றுப். 56)

வாள்    வாய்த்து  இருபெரு  வேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும்
ஒழியா   தொகைநிலையும்   -   வாள்   தொழில்   முற்றி     இரு
பெருவேந்தர்   தாமும்   சுற்றமும்    ஒருவரும்  ஒழியாமல்    பட்ட
பாடும்.['கண்' என்பது இடைச்சொல்].

உதாரணம்

"வருதார் தாங்கி அமர்மிகல் யாவது
பொருதாண்டு ஒழிந்த மைந்தர்புண் தொட்டுக்
குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி
நிறங்கிளர் உருவில் பேஎய்ப் பெண்டிர்
எடுத்தெறி அனந்தல் பறைச்சீர் தூங்கப்
பருந்தருந்து உற்ற தானையொடு செருமுனிந்து
அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
தாமாய்ந் தனரே குடைதுளங் கினவே
உரைசால் சிறப்பின் முரைசொழிந் தனவே
பன்னூ றடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்
இடங்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக்
களங்கொளற்கு உரியோர் இன்றித் தெறுவர
உடன்வீழ்ந் தன்றால் அமரே பெண்டிரும்
பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
மார்பகம் பொருந்தி ஆங்கமைந் தனரே
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவி னோரும் ஆற்ற
அரும்பெறல் உலகம் நிறைய
விருந்துபெற் றனரால் பொலிக நும் புகழே."    (புறம். 62)

செரு  அகத்து   இறைவன்   வீழ்வுறச் சினைஇ ஒருவனை மண்டிய
நல்லிசை நிலையும்  -  பொருகளத்துத்  தன்வேந்தன்  பட அதுகண்டு
கறுத்தெழுந்து  படைத்    தலைவன்    வீரனொருவனை   நெருங்கிப்
பொருத  ஒரு  நற்புகழ் நிலைமையும்.

உதாரணம்

"வானம் இறைவன் படர்ந்தென வாள்துடுப்பா
மானமே நெய்யா மறம் விறகாத் - தேன்இமிரும
கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோன் வாளமர்
ஒள்ளழலுள் வேட்டான் உயிர்."       (புறப். தும்பை. 26)

பலபடை ஒருவற்கு உடைதலின் அவன் ஒள்வாள் வீசிய நூழிலும் -
பல    படை   ஒருவற்குக்   கெடுதலின் அவன் ஒள்ளிய வாள் வீசிய
நூழிலும்.

அது பலரைக் கொல்லுதல், ['மற்று' அசை.]

உதாரணம்

"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவது அன்றிவ் வுலகத்து இயற்கை
இன்றின் ஊங்கோ கேளலம் திரளரை
மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
ஒலியல் மா
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 11:48:24(இந்திய நேரம்)