தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   49


 

லையொடு பொலியச் சூடிப்
பாடின் தெண்கிணை கறங்கக் காண்டக
நாடுகெழு திருவிற் பசும்பூண் செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடிப்
பொருதும் என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒருதா னாகிப் பொருதுகளத்து அடலே"        (புறம். 76)

எனவும்,

"வள்ளை நீக்கி வயமீன் முகந்து
கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்
வேழப் பழனத்து நூழில் ஆட்டு."  (மதுரைக்காஞ்சி. 255-7)

எனவும்   பல  உயிரை  ஒருவன் கொன்றதனை நூழில்   என்றவாறு அறிக.

உளப்பட     புல்லித்தோன்றும்     பன்னிருதுறைத்து   உட்படப்
பொருந்தித்  தோன்றும் பன்னிருதுறைகளையுடைத்து,        [ஏகாரம்
ஈற்றசை.]                                                (14)

73. வாகை தானே பாலையது புறனே
தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்
பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப.

வாகை   பாலையது  புறன்  -  வாகைத்திணை  பாலை  என்னும்
அகத்திணையினது   புறனாம்;   தாவில்   கொள்கை  தத்தம் கூற்றை
பாகுபட     மிகுதிப்படுத்தல்     என்ப    -    அது   கேடில்லாத
கோட்பாட்டினையுடைய   தத்தமக்குள்ள   இயல்பை        வேறுபட
மிகுதிப்படுத்தல் என்பர்.

அதற்கு      இது    புறனாயவாறு என்னையெனின், பாலையாவது
தனக்கென ஒருநிலமின்றி     எல்லா     நிலத்தினும்    காலம்பற்றிப்
பிறப்பது  போல இதுவும்   எல்லா  நிலத்தினும்  எல்லாக் குலத்தினும்
காலம்பற்றி நிகழ்வதாகலினாலும், ஒத்தார் இருவர்   புணர்ச்சியினின்றும்
புகழ்ச்சி  காரணமாகப் பிரியுமாறுபோலத்  தன்னோடு  ஒத்தாரினின்றும்
நீங்கிப் புகழ்ப்படுதலாலும் அதற்கிது   புறனாயிற்று.   அஃது  ஆமாறு
வருகின்ற  சூத்திரங்களானும் விளங்கும்.                       (15)

74. அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்
மறுவில் செய்தி மூவகைக் காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்
நாலிரு வழக்கில் தாபதப் பக்கமும்
பாலறி மரபில் பொருநர் கண்ணும்
அனைநிலை வகையோடு ஆங்கெழு வகையால்
தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்.

இது, வாகைத்திணை பாகுபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று.

பார்ப்பனப்      பக்கம்     முதலாகப்   பொருநர் பக்கம் ஈறாகச்
சொல்லப்பட்ட   அத்தன்மைத்தாகிய நிலைவகையோடே ஏழ்வகையால்
தொகை நிலைபெற்றது   [வாகைத்திணை]  எனவே     தொகைநிலை
பலவென்பது பெறுதும்.

அறுவகைப்பட்ட     பார்ப்பனப்   பக்கமும்  -  ஆறு  திறனாகிய
அந்தணர்பக்கமும்.

அறுவகைப்பட்ட  பக்கம்  எனக்  கூட்டுக.  அவையாவன:-  ஓதல்,
ஓதுவித்தல், வேட்டல்,  வேட்பித்தல்,    ஈதல்,    ஏற்றல்    என்பன.
இவ்வொழுக்கத்தால்     மிகுதல்     வகையாம்   என்பது.பார்ப்பனப்
பக்கமும்   என்றதனான்   அப்பொருளின்   மிகுதி கூறலும் இதன்பாற்
படும். இது மேல் வருவனவற்றிற்கும் ஒக்கும்.

ஓதலாவது கல்வி.

ஓதல் வருமாறு

"இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை உலகத்தும் யாங்காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து."             (நாலடி.கல்வி. 2)

இது கல்வியின் விழுப்பம் கூறிற்று.

"ஆற்றவுங் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆதலால
ஆற்றுணா வேண்டுவ தில்."             (பழமொழி- 116)

இது     கற்றோர்க்கு    உளதாகும்   விழுப்பம்  கூறிற்று.  இஃது
ஏனைய மூன்று வருணத்தார்க்கும் ஒக்கும்.

ஓதுவித்தலாவது - கற்பித்தல்.

ஓதுவித்தல் வருமாறு

"எண்பொருள ஆகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு."            (குறள் - 124)

வேட்டலாவது - வேள்வி செய்தல்.

வேட்டல் வருமாறு

"நன்றாய்ந்த நீள்நிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகாது
ஒன்றுபுரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒருமுதுநூல்
இகல்கண்டோர் மிகல்சாய்மார்
மெய்அன்ன பொய்யுணர்ந்து
பொய்ஓராது மெய்கொளீஇ
மூவேழ் துறையும் முட்டின்று போகிய
உரைசால் சிறப்பின் உரவோர் மருக
வினைக்குவேண்டி நீபூண்ட
புலப்புல்வாய்க் கலைப்பச்சை
கவற்பூண்ஞாண் மிகைப்பொலிய
மறங்கடிந்த அருங்கற்பின்
அறம்புகழ்ந்த வலைசூடிச்
சிறுநுதற்பேர் அகலல்குற்
சிலசொல்லிற் பல கூந்தல் நின்
நிலைக்கொத்தநின் துணைத் துணைவியர்
தமக்கமைந்த தொழில் கேட்பக்
காடென்றா நாடென்றாங்கு
ஈரேழின் இடமுட்டாது
நீர்நாண நெய்வழங்கியும்
எண்நாணப் பலவேட்டும்
மண்நாணப் புகழ்பரப்பியும்
அருங்கடிப் பெருங்காலை
விருந்துற்றநின் திருந்தேந்துநிலை
என்றும்,
காண்கதில் அம்ம யாமே குடாஅது
பொன்படு நெடுவரைப் புயலேறு

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 11:48:35(இந்திய நேரம்)