Primary tabs


சிலைப்பின்
பூவிரி புதுநீர்க் காவிரி புரக்குந்
தண்புனல் படப்பை எம்மூர் ஆங்கண்
உண்டுந் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்
செல்வல் அத்தை யானே செல்லாது
மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக்
கழைவளர் இமயம் போல
நிலீஇயர் அத்தைநீ நிலமிசை யானே."
(புறம். 166)
வேட்பித்தலாவது, வேள்வி செய்வித்தல். "நளிகடல்இருங்
குட்டத்து" என்னும் புறப்பாட்டினுள்,
"ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்றம் ஆக
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாள்வாய் வேந்தே"
(புறம். 26)
என அரசன் வேட்பித்தவாறும், பார்ப்பார் வேட்டவாறும் கண்டு கொள்க.
ஈதலாவது, இல்லென இரந்தோர்க்குக் கொடுத்தல்.
உதாரணம்
"இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள."
(குறள்.223)
ஏற்றலாவது, கோடல்: கொள்வோன் தனது சிறப்பிற் குன்றாமல் கோடல்.
உதாரணம்
"இரவலர் புரவலை நீயும் அல்லை
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்
இரவலர் உண்மையும் காண்இனி இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண்இனி நின்னூர்க்
கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த
நெடுநல் யானைஎம் பரிசில்
கடுமான் தோன்றல் செல்வல் யானே."
(புறம்.112)
ஐவகை மரபின் அரசர் பக்கமும் - ஐவகைப் பட்ட அரசர் பக்கமும்.
அவையாவன: ஓதலும் வேட்டலும் ஈதலும் படைவழங்குதலும்
குடியோம்புதலுமாம். இவற்றுள் முந்துற்ற மூன்றும் மேற்சொல்லப்பட்டன.
ஏனைய இரண்டும் இனிக் கூறப்படுகின்றன.
படை வழங்குதல் வருமாறு
"கடுங்கண்ண கொல்களிற்றால்
காய்புடைய எழுமுருக்கிப்
பொன்னியல் புனைதோட்டியான்
முன்புதுரந்து சமம்தாங்கவும்
பாருடைத்த குண்டகழி
நீரழுவ நிவப்புக் குறித்து
நிமிர் பரிய மா தாங்கவும்
ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசை
சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவுங் குரிசில்
வலிய வாகுநின் தாள்தோய் தடக்கை
புலவுநாற் றத்த பைந்தடி
பூநாற்றத்த புகைகொளீஇ ஊன்துவை
கறிசோறு உண்டு வருந்து தொழில் அல்லது
பிறிதுதொழில் அறியா ஆகலின் நன்றும்
மெல்லிய பெரும தாமே நல்லவர்க்கு
ஆரணங் காகிய மார்பிற் பொருநர்க்கு
இருநிலத் தன்ன நோன்மைச்
செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே."
(புறம்.14)
குடியோம்புதல் வருமாறு
"இருமுந்நீர்க் குட்டமும்
வியன்ஞாலத்து அகலமும்
வளிவழங்கு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றாங்கு,
அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை
அறிவும் ஈரமும் பெருங்க ணோட்டமும்
சோறுபடுக்குந் தீயொடு
செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது
பிறிதுதெறல் அறியார்நின் நிழல்வாழ் வோரே
திருவில் அல்லது கொலைவில் அறியார்
நாஞ்சில் அல்லது படையும் அறியார்
திறனறி வயவரொடு தெவ்வர் தேயஅப்
பிறர்மண் உண்ணுஞ் செம்மல்நின் நாட்டு
வயவுறு மகளிர் வேட்டுணின் அல்லது
பகைவர் உண்ணா அருமண் ணினையே
அம்பு துஞ்சும் கடி அரணால்
அறந்துஞ்சும் செங்கோலையே
புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்
விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை
அனையை ஆகல் மாறே
மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே."
(புறப்.20)
'பக்கம்' என்றதனான் அரசரைப்பற்றி வருவனவற்றிற்கெல்லாம்
இதுவே ஓத்தாகக் கொள்க.
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும் - ஆறு மரபினையுடைய
வணிகர் வேளாளர் பக்கமும்.
வணிகர்க்குரிய ஆறுபக்கமாவன:- ஓதல், வேட்டல்,
ஈதல், உழவு,
வாணிகம், நிரையோம்பல்.
உதாரணம்
"உழுது பயன்கொண் டொலிநிரை ஓம்பிப்
பழுதிலாப் பண்டம் பகர்ந்து - முழுதுணர
ஓதி அழல்வழிபட் டோம்பாத ஈகையான்
ஆதி வணிகர்க் கரசு."
(புறப்.வாகை. 10)
வேளாண் மாந்தர்க்குரிய ஆறு மரபாவன: உழவு, உழவொழிந்த
தொழில், விருந்தோம்பல், பகடு புறந்தருதல், வழிபாடு, வேதம் ஒழிந்த
கல்வி.
உதாரணம்
"சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை."
(குறள். 1031)
"கருமஞ்செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையில் பீடுடையதில்."
(குறள். 1021)
"இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவா