Primary tabs


வோன் பால்நின்று
தான்வெகுண் டாக்கிய தகுதிக் கண்ணும்
அருமைக் காலத்துப் பெருமை காட்டிய
எளிமைக் காலத் திரக்கத் தானும்
பாணர் கூத்தர் விறலியர் என்றிவர்
பேணிச் சொல்லிய குறைவினை எதிரும்
நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர்
காத்த தன்மையிற் கண்ணின்று பெயர்ப்பினும்
பிரியுங் காலத் தெதிர் நின்று சாற்றிய
மரபுடை எதிரும் உளப்படப் பிறவும்
வகைபட வந்த கிளவி யெல்லாந்
தோழிக் குரிய என்மனார் புலவர்.
என்-எனின், கற்பின்கண்
தோழிகூற்று நிகழும் இடம்
தொகுத்துணர்த்துதல் நுதலிற்று.
பெறற்கரும் சிறப்பு முதலாக மரபுடை யெதிரும் உளப்படப் பிறவும்
ஈறாக மொழியப்பட்டவை யாவும் தோழிக்குரிய என்று
கூறுவர் புலவர்
என்றவாறு.
பெறற்கரும் பெரும்பொருண் முடிந்தபின் வந்த
தெறற்கரு மரபிற்
சிறப்பின்கண்ணும் என்பது-பெறுதற்கு அரிய
பெரும் பொருளை
முடித்த பின்னர்த் தோன்றிய தெறுதற்கரிய
மரபு காரணத்தால்
தலைவனைச் சிறப்பித்துக் கூறுமிடத்தும்
தோழிகூற்று நிகழும்
என்றவாறு.
பெரும்பொருள் - ஈண்டு
வரைவிற்கேற்றது. தெறுதல் - அழல
நோக்குதல்.
உதாரணம்
"அயிரை பரந்த அந்தண் பழனத்து
ஏந்தெழில் மலர்ந்த தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள்
இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர்
தொழுதுகாண் பிறையில் தோன்றி யான் உமக்கு
அரியம் ஆகிய காலைப்
பெரிய நோன்றனிர் நோகோ யானே."
(குறுந்.178)
என வரும்.
அற்றமழிவு உரைப்பினும் என்பது -
முற்காலத்துற்ற வருத்தத்தின்
நீங்கினமை கூறினும் என்றவாறு.
உதாரணம்
"எரிமருள் வேங்கை இருந்த தோகை
இழையணி மடந்தையில் தோன்று நாட
இனிதுசெய் தனையால் நுந்தை வாழியர்
நன்மனை வதுவை அயரஇவள்
பின்னிருங் கூந்தல் மலரணிந் தோயே."
(ஐங்குறு.294)
என வரும்.
அற்றம் இல்லாக் கிழவோற் சுட்டிய தெய்வக் கடத்தினும் என்பது -
குற்றமில்லாத தலைமகனைச் சுட்டிய தெய்வக்கடன் கொடுத்தற்கண்ணும்
என்றவாறு.
உதாரணம்
"நெஞ்சமொடு மொழிகடுத் தஞ்சுவர நோக்குந்
தாயவட் டெறுதரக் காக்கவெம் மகனெனச்
சிறந்த தெய்வத்து மறையுறை குன்ற
மறைந்துநின் றிறைஞ்சினம் பலவே
பெற்றனம் யாமே மற்றதன் பயனே."
"வாழி ஆதன் வாழி அவினி
வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக
எனவேட் டோளே யாயே யாமே
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்
தண்துறை ஊரன் வரைக
எந்தையுங் கொடுக்க எனவேட் டேமே."
(ஐங்குறு.6)
"திண்தேர் நள்ளி கானத் தண்டர்
பல்ஆ பயந்த நெய்யில் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெண்சோறு
ஒருகலத் தேந்தனுஞ் சிறிதென் தோழி
பெருந்தோள் நெகிழ் சூழ்ந்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே."
(குறுந்.210)
என வரும்.
சீருடைப்பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும் என்பது - சீருடைய
பெரும்பொருளானது
இற்கிழமை; அதனைத் தலைமகன்மாட்டு
வைத்தவிடத்து அவளை மறந்து ஒழுகினவழியும் என்றவாறு.
அஃதாவது அறத்தினானாதல் பொருளினானாதல்
அவனுக்காகிய
இசையுங் கூத்தும் முதலியவற்றான் அத்திறம் மறத்தல். அவ்வழியுந்
தோழி கூற்று நிகழும்.
உதாரணம்
"பொங்குதிரை பொருத வார்மணல் அடைகரைப்
புன்கால் நாவற் பொதப்புற இருங்கனி
கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்செத்துப்
பல்கால் அலவன் கொண்டகோட் கூர்ந்து
கொள்ளா நரம்பின் இமிரும் பூசல்
இரைதேர் நாரை யெய்திய விடுக்குந்
துறைகெழு மாந்தை அன்ன இவள்நலம்
பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய
உழையிற் போகா தளிப்பினுஞ் சிறிய
ஞெகிழ்ந்த கவின்நலங் கொல்லோ மகிழ்ந்தோர்
கட்களிய செருக்கத் தன்ன
காமங் கொல்லிவள் கண்பசந் ததுவே."
என வரும்.
அடங்கா வொழுக்கத் தவன்வயி னழிந்தோளை மடங்கக் காட்டுதற்
பொருளின்கண்ணும் என்பது
- அடங்கா வொழுக்கத்தையுடைய
தலைவன்மாட்டு
மனன் அழிந்தோளை யடங்கக் காட்டுதற்கு ஏதுவான
பொருட்பக்கத்தினும் கூற்றுநிகழும் என்றவாறு.
உதாரணம்
"இதுமற் றெவனோ தோழி துனியிடை
இன்னர் என்னும் இன்னாக் கிளவி
இருமருப் பெருமை யீன்றணிக் காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது
பாற்செய் பைம்பயிர் ஆரும் ஊரன்
திருமனைப் பல்கடம் பூண்ட
பெருமுது பெண்டிரே மாகிய நமக்கே."
(குறுந்.181)
என வரும்.
பிழைத்துவந் திருந்த கிழவனை
நெருங்கி இழைத்தாங்காக்கிக்
கொடுத்தற்கண்ணும்
என்பது - பிழைத்து வந்திருந்த தலைமகனை
நெருங்கித்
தலையளிக்குமாறு கூறித் தலைமகன்மாட்டாக்கிக்
கொடுத்தற்கண்ணுங் கூற்று நிகழும் என்றவாறு.
உதாரணம்
"பகலில் தோன்றும் பல்கதிர்த் தீயின்
ஆய்பலஞ் செறுவில் தேன்ஊர் அன்ன
இவள் நலம் புலம்பப் பிரிய
அனைநல முடையளோ மகிழ்நநின் பெண்டே." (ஐங்குறு.57)
"கோட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்றுற
மையல் நெஞ்சிற் கெவ்வந் தீர
நினக்குமருந் தாகிய யான்இனி
இவட்குமருந் தன்மை நோம்என் நெஞ்சே." (ஐங்குறு.59)
என வரும்.
வணங்கிய மொழியான் வணங்கற்