Primary tabs

தல் நுதலிற்று ; மரபுவழுக் காத்ததூஉமாம்.
உரை:
ஒருபொருளைக் கருதி வேறு வேறு பெயர் வருமெனின்,
அப்பெயர் வேறு வேறு தொழில்கோடற்கு வரும் பெயரெல்லாஞ்
சொல்லிய பின்னைத் தொழில் கொடுக்க, அங்ஙனம் கொடுப்ப வந்த
பெயரெல்லாம் அதற்கும் ஒன்றும் ; அல்லாக்கால் அதற்கு ஒன்றிடனில
என்றவாறு.
வரலாறு: ‘ஆசிரியன், பேரூர்கிழான், செயிற்றியன், இளங்கண்ணன்,
சாத்தன் வந்தான்’ எனவரும்.
* உம்மையால் உறுப்பினாகிய பெயர்க்கும் கல்வியினாகிய
பெயர்க்கும் கொள்க. உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க --
பிரதிபேதம்.
மற்று, ‘எந்தை வருக, எம்பெருமான் வருக, மைந்தன் வருக’
எனவும் ஒருபொருட்கு ஒன்றுமாலெனின், அதனை, ‘ஞாபகங்கூறல்’
(தொல். பொருள். மரபியல். 110) என்னும் உத்திவகையான் உணர்க ;
என்னை, ‘தொழில் வேறு கிளப்பின் ஒன்றிடனிலவே’ என்றார்.
அத்தொழில் வேறு கிளத்தறான் இருவகைப்படும், பெயர்தொறும் ஒரு
தொழில் கிளத்தலும், வேறுகிளத்தலும் ஆம். பெயர்தொறும் வேறாய்த்
தொழில் கிளத்தலும் வேறு கிளத்தலாம் ; அதனால், இச் சூத்திரத்துப்
பெயர்தொறும் வேறாய்த் தொழில் கிளத்தலைத், ‘தொழில் வேறு
கிளப்பின் ஒன்றிடனில’ என்றது.
அங்ஙனம் ஞாபகத்தாற் கொள்வதனையும் ஒரு பொருட்கு
ஒன்றுமென்று, மற்று வரும் பெயரெல்லாஞ் சொல்லிப் பின்னைத்
தொழில் கிளப்பதனை எடுத்தோத்தினாற் கூறி, அவ்வப் பெயர்தொறும்
ஒருதொழில் கிளப்பதனை உத்திவகையாற் கொண்டது என்னையெனின்,
-- ‘எந்தை வருக, எம்பெருமான் வருக, மைந்தன் வருக’ என்றவிடத்து,
ஒரு பொருண்மேலும் ‘நிற்கும் மற்றையதாயின் ஒரு பொருட்கே
திரிபுபடாது ஒன்றும். அதனால், அதனை எடுத்தோத்தினாலும், இதனை
யுத்தி வகையானும் கொண்டான் என்பது. (42)
43. தன்மைச் சொல்லே யஃறிணைக் கிளவியென்
றெண்ணுவழி மருங்கின் விரவுதல்