Primary tabs

வரையார்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின், இது திணை வழுவாமை
யுணர்த்துதல் நுதலிற்று.
உரை: தன்மைச் சொல்லும், அஃறிணைச் சொல்லும் அவை
எண்ணுமிடத்து விராஅய் வரப் பெறும் எனக் கொள்க என்றவாறு.
‘தன்மைச்சொல்’ எனவே, உயர்திணைச் சொல் எனப் பெறும்.
வரலாறு: ‘யானும் என் எஃகமுஞ் சாறும்’ -- என வரும்.
‘மருங்கு’ என்ற மிகையான், ‘நீயும் நின் படைக்கலமுஞ் சாறிர்’ --
‘அவனும் தன் படைக்கலமுஞ் சாறும்’ எனவும் வருதல் கொள்க. (43)
44. ஒருமை யெண்ணின் பொதுப்பிரி பாற்சொல்
ஒருமைக் கல்ல தெண்ணுமுறை நில்லாது.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், மரபுவழுக்காத்தல்
நுதலிற்று.
உரை:
ஒருமை எண்ணின் பொதுப் பிரி பாற் சொல் என்பது -- ஓர்
எண்ணாய், இரண்டுபாற்கும் பொதுவாய், ஒருவன் ஒருத்தி எனப்பிரிந்து
நின்று, பால் வேறுபடுவதாயிற்று; அஃது யாதோவெனின், ஒருவர்
என்பது. அஃது இருபாற்கும் பொதுவாய் நிற்பினும். ஒருவர் இருவர்
என்று எண்ணும்பொழுதாயின் ஒரு பாற்கே உரித்தாம் என்பது.
அப் பொதுமையிற் பிரிந்த பாற் சொல் ஒருவன் ஒருத்தி என்பது:
அவை தத்தம் ஒருமை விளங்கி நிற்குந்துணை யல்லது அப்பால்மேல்
எண்ணுமுறை யோடா என்பது. (44)
இனி, எண்ணுதல் களைந்து, ‘ஒருவர்’ என்றக்கால் இருபாலையும்
தழீஇ நிற்கும்; இதுவும் ஒருசார் ஆசிரியர் உரைப்ப.
இனி, ஒருமை எண்ணின் பொது என்ப ஒருவர் என்பது:
45. வியங்கோ ளெண்ணுப்பெயர் திணைவிரவு வரையார்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் திணை வழுக்
காத்தல் நுதலிற்று.
உரை:
வியங்கோளுடைய எண்ணுப் பெயர் திணை விரவுதல்
கடியப்படா என்றவாறு.
வரலாறு: ‘ஆவும் ஆயனும் செல்க’ என வரும். இஃது
இனமல்லதனோடு எண்ணினமையின் வழு