Primary tabs

வாயிற்று. இனி, ‘ஆவும் ஆயனும் செல்க’ என்றவிடத்துச் ‘செல்க’
என்னும் வியங்கோள்வினை இருதிணைக்கும் முடிபு ஏற்றமையின்
திணைவழுவமைதியாம். *
மற்று, இன்ன எண் என்பது சூத்திரத்துப் பெற்றிலாமையின்
‘உய்த்துணரவைத்தல்’ என்னும் உத்திவகையான், உம்மையெண்ணும்
எனவென்னெண்ணும் எனக்கொள்க; என்னை, இவ்விரண்டென்னும்
தொகை பெற்றும் பெறாதும் முடியும்; மற்றை யெண்ணுக்க ளெல்லாம்
தொகை பெற்றே முடியும். ஈண்டுத் தொகை பெறும் எண்ணினாற்
கூறிற்றிலர், திணைவழூஉம் ஆகலான் என்பது. (45)
46. வேறுவினைப் பொதுச்சொ - லொருவினை கிளவார்.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் மரபு வழுக்காத்தல்
நுதலிற்று.
உரை: வேறு வேறு வினையையுடையவாய் நின்ற சொற்களை ஒரு
வினையாற் சொல்லற்க என்பது; எனவே, பொது வினையாற் கிளக்க
என்பதாம்.
இனி, ஒருவும் வினை என்பது ஒரூஉவினை என்றாயிற்று என்றலும்
ஒன்று ; ஒரூஉதல் என்பது நீங்குதல்.
அவை: அடிசில், அணிகலம், இயமரம் என்பன ; இயம்பினார்
என்னுந் தொடக்கத்தன கொள்க.
* அமைதியாமாயிற்றுமென்க -- பிரதிபேதம்.
ஒரூஉவினை -- என்றும் பாடம். மற்று,
‘ஊன்றுவை கறிசோ றுண்டு வருந்தும்’ (புறநா. - 14.)
என வந்ததால் எனின், அது பாட மறிந்து திருத்திக் கொள்க. (46)
47. எண்ணுங் காலு மதுவதன் மரபே.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் மரபு வழுக்காத்தல்
நுதலிற்று.
உரை:
வேறு வேறு வினையையுடைய சொற்களை யெண்ணுங்காலும்
பொது வினையாற் சொல்லுப என்றவாறு.
வரலாறு: ‘யாழுங் குழலும் பறையும் இயம்பினார்’ என வரும். (47)
48. இரட்டைக் கிளவி யிரட்டுப்பிரிந் திசையா.
இச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின்,