தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2348


போல்வனவுங்,  ‘‘கரைசேர்  வேழங்  கரும்பிற்  பூக்குந் துறைகே
ழூரன்’’
(ஐங்குறு.12) என்றாற் போலக் கருப்பொருள் தானே உவமமாய்
நின்று   உள்ளுறைப்   பொருள்   தருவனவும்,   பிறவும்  வேறுபட
வருவனவும்  இதனான்  அமைக்க. இது புறத்திற்கும் பொது. இதனான்
உள்ளுறையுவமமும், ஏனையுவமமு மென உவமம் இரண்டே யென்பது
கூறினார்.                                              (46)

உள்ளுறையுவமம் தெய்வம் நீங்கலான ஏனைய
கருப்பொருளிடமாகப் பிறத்தல்
 

47.
உள்ளுறை தெய்வ மொழிந்ததை நிலனெனக்
கொள்ளும் என்ப குறியறிந் தோரே.
 

இது முறையே உள்ளுறையுவமங் கூறுகின்றது.

(இ-ள்.)  உள்ளுறை  - உள்ளுறை யெனப்பட்ட உவமம்; தெய்வம்
ஒழிந்ததை  நிலன்  எனக்  கொள்ளும்  என்ப  -  தெய்வ  முதலிய
கருப்பொருளுட்  டெய்வத்தை  ஒழித்து  ஒழிந்த  கருப்பொருள்களே
தனக்குத்  தோன்றும் நிலனாகக் கொண்டு புலப்படுமென்று கூறுப; குறி
அறிந்தோரே - இலக்கணம் அறிந்தோர் எ-று.

எனவே,     உணவு முதலிய     பற்றிய    அப்பொருணிகழ்ச்சி
பிறிதொன்றற்கு உவமையாகச் செய்தல் உள்ளுறையுவமமாயிற்று.

உ-ம்:

‘‘ஒன்றே னல்ல னொன்றுவென் குன்றத்துப்
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்
நின்றுகொய மலரு நாடனொ
டொன்றேன் றோழிமற் றொன்றி னானே’’    (குறுந்.208)

இக்     குறுந்தொகை,  பிறிதொன்றின்  பொருட்டுப் பொருகின்ற
யானையான்  மிதிப்புண்ட  வேங்கை நசையற உணங்காது மலர்கொய்
வார்க்கு  எளிதாகி  நின்று  பூக்கும்  நாடனென்றதனானே  தலைவன்
நுகருங்  காரணத்தானன்றி  வந்து எதிர்ப்பட்டுப் புணர்ந்து நீங்குவான்
நம்மை  இறந்துபாடு  செய்வியாது ஆற்றுவித்துப்  போயினானெனவும்,
அதனானே  நாமும்  உயிர்தாங்கியிருந்து  பலரானும் அலைப்புண்ணா
நின்றனம்    வேங்கை    மரம்   போல   எனவும்,   உள்ளத்தான்
உவமங்கொள்ள வைத்தவாறு காண்க.

ஒழிந்தனவும் வந்துழிக் காண்க.

இனி அஃது    உள்ளத்தான்    உய்த்துணரவேண்டுமென  மேற்
கூறுகின்றார்.                                           (47)

உள்ளுறை யுவமமாவது இதுவெனல்
 

48.
உள்ளுறுத் திதனோ டொத்துப்பொருண் முடிகென
உள்ளுறுத் திறுவதை யுள்ளுறை யுவமம்.
 

இதுவும் அங்ஙனம்  பிறந்த  உள்ளுறையுவமத்தினைப்  பொருட்கு
உபகாரம்பட உவமங்கொள்ளுமாறு கூறுகின்றது.

(இ-ள்.) இதனோடு ஒத்துப் பொருள் முடிகென  உள்ளுறுத்து-யான்
புலப்படக்    கூறுகின்ற    இவ்வுவமத்தோடே   புலப்படக்   கூறாத
உவமிக்கப்படும் பொருள் ஒத்து முடிவதாகவென்று புல
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 23:06:21(இந்திய நேரம்)