Primary tabs

இனி, மலையரணும்
நிலவரணுஞ், சென்று சூழ்ந்து நேர்தலில்லா
ஆரதர்
அமைந்தனவும் இடத்தியற்றிய மதில்போல்
அடிச்சிலம்பின்
அரணமைந்தனவும் மீதிருந்து
கணை சொரியும் இடமும்
பிறவெந்திரங்களும் அமைந்தனவாம். இனிக் காட்டரணும் நீரரணும்
அவ்வாறே வேண்டுவன யாவும் அமைந்தனவாம். இங்ஙனம்
அடைத்திருத்தலும் அவனைச் சூழ்ந் தழித்தலும் கலியூழிதோறும்
பிறந்த சிறப்பில்லா அரசியலாதலின் இது வஞ்சமுடைத்தாயிற்று.
சிறப்புடை
அரசியலாவன, மடிந்த
உள்ளத்தோனையும்
மகப்பெறாதோனையும்
மயிர்
குலைந்தோனையும்
அடிபிறக்கிட்டோனையும் பெண்பெயரோனையும்
படையிழந்தோனையும்
ஒத்தபடை யெடாதோனையும் பிறவும் இத்தன்மையுடையோரையுங்
கொல்லாது விடுதலுங், கூறிப் பொருதலும் முதலியனவாம்.
இனி ‘ஆகு’மென்றதனான் எதிர்சென்ற வேந்தன் பொருது தோற்றுச்
சென்று
அடைத்திருத்தலும் உழிஞையாம். மற்றை வேந்தன்
வளையாது மீளின் அவனடைத்தது உழிஞையாகா தென்றுணர்க. (10)
உழிஞை எட்டுத் துறைத்து
ஆதல்
இது
முற்கூறிய
முற்றலுங் கோடலும் ஒருவன்
தொழிலன்றென்பதூஉம், முற்கூறியதுபோல ஒருதுறை இருவர்க்கு
முரியவாகாது, ஒருவர்க்கு நான்கு நான்காக எட்டாமென்பதூஉங்
கூறுகின்றது.
(இ-ள்.)
அதுவே தானும் - அவ்வுழிஞைத் துறைதானும்; இருநால்
வகைத்து. மதில்முற்றிய வேந்தன் கூறு நான்கும் அகத்தோன்கூறு
நான்குமென எட்டு வகைத்து எ-று.
அது மேற்கூறுப. (11)
அவை எட்டுத்துறையுமாவன
உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்
தொல்லெயிற் கிவர்தலுந் தோலின் பெருக்கமும்
அகத்தோன் செல்வமு மன்றி முரணிய
புறத்தோ ணணங்கிய பக்கமுந் திறப்பட
வொருதான் மண்டிய குறுமையு முடன்றோர்
வருபகை பேணா ராரெயி லுளப்படச்
சொல்லப் பட்ட நாலிரு வகைத்தே.
இது முற்கூறிய நாலிரு
துறைக்கும் பெயரும் முறையுந் தொகையுங்
கூறுகின்றது.
(இ-ள்.)
கொள்ளார் தேஎங் குறித்த
கொற்றமும் - பகைவர்
நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயுங் கொண்டான் போல
வேண்டியோர்க்குக் கொடுத்தலைக் குறித்த
வெற்றியும்
தன்னை இகழ்ந்