தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3209


மெய்ப்பாடுபற்றியுணர்க. இஃதும் அகம்.

‘‘வானமூர்ந்த’’ (11) என்னும் அகப்பாட்டினுள் (அகம்.11)

‘‘மெய்புகு வன்ன கைகவர் முயக்க
மவரும் பெறுகுவர் மன்னே’’

எனக்     கூறி,   அழுதன்   மேவாவாய்க்   கண்ணுந்  துயிலுமென
இரக்கம்மீக்  மீக்கூறியவாறு  முணர்க.  ‘‘குன்றியன்ன’’  (133) என்னும்
அகப்பாட்டும் (133) அது. இவை பாலைக்கண் இரங்கல் நிகழ்ந்தன.

இங்ஙனம்     இச்சூத்திரவிதி உண்மையிற் சான்றோர் அகத்தினுங்
கலியினும்  ஐங்குறுநூற்றினும் பாலைக்கண்ணே உடன்போக்கு நிகழ்ந்த
செய்யுட்களைக் கோத்தாரென் றுணர்க.

இல்லிருந்து  செந்தீயோம்பல் வேளாளர்க்கு இன்மையிற் ‘கொண்டு
தலைக்கழிதல்’     அவர்க்கு    உரியதாயிற்று.    ஒழிந்த   மூன்று
வருணத்தோருந்  தமக்கு  உரிய  பிரிவின்கட்  செந்தீ  யோம்புவாரை
நாட்டிப்  பிரிப;  ஆகலான், அவர்க்கு ஏனைப் பிரிவுகள் அமைந்தன.
இதனைக் ‘‘கொடுப்போ  ரின்றியுங் கரண முண்டே’’  (143) எனக்
கற்பியலிற் கரணம் வேறாகக் கூறுமாறுஆண்டுணர்க. ‘‘வேர்முழுதுலறி
நின்ற’’
   (145)    என்னும்    மணிமிடைபவளத்துட்    கூழுடைத்
தந்தையிடனுடை   வரைப்பி, னூழடி யொதுங்கினு முயக்கும் ‘‘எனவுங்
கிளியும் பந்தும்’’
(49) என்னும் களிற்றியானை நிரையுள், ‘‘அல்குபத
மிகுந்த கடியுடை   வியனகர்’’
  எனவும்,   நெல்லுடைமை  கூறிய
அதனானே வேளாண் வருணமென்பது பெற்றாம்.

பாலைக்கட் குறிஞ்சி மயங்குதல்
 

16.
கலந்த பொழுதும் காட்சியும் அன்ன.
இதுவும் பாலைக்கட் குறிஞ்சி மயங்கு மென்கின்றது.
 

(இ-ள்)  கலந்த   பொழுதும்  காட்சியும்  - இயற்கைப் புணர்ச்சி
நிகழ்ந்த காலமும் அதன் முன்னர்த்தாகிய வழிநிலைக் காட்சி நிகழ்ந்த
காலமும்;  அன்ன  -  முன்னர்ச் சூத்திரத்துட் கொண்டுதலைக்கழிந்த
காலத்தை உடைய எ-று.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 01:48:11(இந்திய நேரம்)