Primary tabs

மண்டிலத்து
அருமையும் - அங்ஙனம் பொருள் வருவாய்க்கு
ஏதுவாகிய வேற்றுப் புலங்களின் அருமை கூறிப் பிரிதற்கண்ணும்;
இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.
தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் - தோற்றஞ் சான்ற
புகழினராகிய வேற்று வேந்தர்தமது மீக்கூற்றங் கருதிப்
பிரிதற்கண்ணும்;
இதற்குத் தலைவன் கூற்று வந்துழிக் காண்க.
‘தோன்றல்
சான்ற’ என்றதனாற் றெவ்வர் தன்னின் மிக்காரெனக்
கேட்டுழி அழுக்காறு
தோன்றலின், அதுவும் பிரிதற்கு
ஏதுவாமென்றுணர்க. இஃது அரசர்க்கே யுரித்து.
பாசறைப்
புலம்பலும் - தலைவன் பாசறைக்கண் இருந்து தனக்கு
வெற்றி தோன்றிய காலத்துந் தான் அவட்குக் கூறிப் போந்த பருவம்
வந்துழியுந் தூது கண்டுழியும் அவள் வருந்துவளென நினைத்துத்
தனிமை கூறும் இடத்தும்;
இதனைக்
‘கிழவி நிலையே’ (தொல். பொ. கற். 45) என்னுஞ்
சூத்திரத்தான் விலக்குவரெனின்,
அதற்கு உம்மை விரித்துக் கிழவி
நிலையை வினைசெய்யாநிற்றலாகிய
இடத்து நினைந்து கூறினானாகக்
கூறார்; வெற்றி நிகழுமிடத்துந் தான் குறித்த பருவம் வந்துழியுந் தூது
கண்டுழியும்
வருத்தம் விளங்கிக் கூற்றுத் தோன்றுமென்று
பொருளாமென்றுணர்க.
முடிந்த
காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற் வகையினும்
-வகையின் வினைத்திறமுமென மாற்றுக. வேந்தன் எடுத்துக் கொண்ட
வினை
முடிந்த காலத்துத் தான் போக்கொருப்பட்டு நின்று பாகனொடு
விரும்பிக்
கூறிய வகையின்கட் டோன்றிய வேறொரு
வினைத்திறத்திடத்தும்;
என்றது, அரசனுக்குப் பின்னும் ஒரு பகை