Primary tabs

அகலேன் மன்னே.’’ (அகம்.49)
இவ் வகப்பாட்டு
உடன்போன தலைவியை நினைந்து செவிலி
மனையின்கண் மயங்கியது.
‘‘அத்த நீளிடை யவனொடு போகிய
முத்தேர் வெண்பன் முகிழ்நகை மடவர
றாய ரென்னும் பெயரே வல்லா
றெடுத்தேன் மன்ற யானே
கொடுத்தோர் மன்றவவ ளாயத் தோரே.’’
(ஐங்குறு.380)
இவ் வைங்குறுநூறு
செவிலி தெருட்டுவார்க்குக் கூறியது.
‘‘முலைமுகஞ்
செய்தன முள்ளெயி றிலங்கின’’
என்னும்
அகப்பாட்டு (7) மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்
சென்று நவ்விப் பிணையைக் கண்டு சொற்றது. செவிலி கானவர்
மகளைக் கண்டு கூறியதுமாம்.
‘‘காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
யகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே.’’
(குறுந்.44)
இது குறுந்தொகை. செவிலி கடத்திடைத் தன்நெஞ்சிற்குச்
சொல்லியது.
‘‘இடிதுடிக் கம்பலையு மின்னாத வோசையு மிசையி
னாராக்
கடுவினை யாளர் கடத்திடைப் பைங்குரவே கவன்று
நின்றாய்
கொடுவினை மேற்செய்த வெம்மேபோ னீயும்
படுசினைப் பாவை பறித்துக்கோட் பட்டாயோ பையக்
கூறாய்.’’
இது செவிலி குரவொடு புலம்பியது.
‘‘தான்றாயாக் கோங்கந் தளர்ந்து முலைகொடுப்ப
வீன்றாய்நீ பாவை யிருங்குரவே - யீன்றாண்
மொழிகாட்டா யாயினு முள்ளெயிற்றாள் சென்ற
வழிகாட்டா யீதென்று வந்து.’’
(திணைமாலை 65)
இது குரவே வழிகாட்டென்றது.
‘‘குடம்புகாக் கூவல் குடிகாக்குஞ் சின்னீ
ரிடம்பெறா மாதிரியு மேறாநீ ளத்த
முடம்புணர் காத லுவப்ப விறந்த
தடம்பெருங் கண்ணிக்கு யான்றாயர் கண்டீர்.’’
இது நீ யாரென்று வினாயினார்க்குச்
செவிலி கூறியது. இன்னும்
வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைத்துக் கொள்க.
இனித் தலைவிகூற்று நிகழுமாறு:-
‘‘பைபயப் பசந்தன்று நுதலுஞ்