Primary tabs

சாஅய்
ஐதா கின்றென் தளிர்புரை மேனியும்
பலரும் அறியத் திகழ்தரும் அவலமும்
உயிர்கொண்டு கழியின் அல்லதை நினையின்
எவனோ வாழிதோழி பொரிகால்
பொகுட்டரை யிருப்பைக் குவிகுலைக் கழன்ற
வாலி யொப்பின் தூம்புடைத் திரள்வீ
ஆறுசெல் வம்பலர் நீளிடை யழுங்க
ஈனல் எண்கின் இருங்கிளை கவரும்
கரம்பல கடந்தோர்க் கிரங்குப வென்னார்
கௌவை மேவல ராகிஇவ்வூர்
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
புரைய அல்லஎன் மகட்கெனப் பரைஇ
நம்முணர்ந் தாறிய கொள்கை
யன்னை முன்னர்யாம் என்னிதற் படலே.’’
(அகம்.95)
இது போக்குடன்பட்டமை தலைவி தோழிக் குரைத்தது. அகம்.
‘‘அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீ டுழந்தன்று மன்னே யினியே
வான்பூங் கரும்பி னோங்குமணற் சிறுசிறை
தீம்புன னெரிதர வீந்துக் காங்குத்
தாங்கு மளவை தாங்கிக்
காம நெரிதரக் கைநில் லாதே.’’
(குறுந்.149)
இக் குறுந்தொகை நாண் நீங்கினமை கூறியது.
‘‘சிலரும் பலருங் கடைக்க ணோக்கி
மூக்கி னுச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகிற் பெண்டி ரம்ப றூற்றச்
சிறுகோல் வலத்த ளன்னை யலைப்ப
வலந்தனென் வாழி தோழி கானற்
புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவற்
கடுமான் பூண்ட நெடுந்தேர் கடைஇ
நடுநாள் வரூஉ மியறேர்க் கொண்கனொடு
செலவயர்ந் திசினால் யானே
யலர்சுமந் தொழிகவிவ் வழுங்க லூரே.’’
(நற்.149)
இந் நற்றிணை அலர் அச்சம் நீங்கினமை கூறியது.
‘‘சேட்புல முன்னிய வசைநடை யந்தணிர்
நும்மொன் றிரந்தனென் மொழிவ லெம்மூர்த்
தாய்நயந் தெடுத்த வாய்நலங் கவின்பெற
வாரிடை யிறந்தன ளென்மி
னேரிறை முன்கையென் னாயத் தோர்க்கே.’’ (ஐங்குறு.384)
இவ் வைங்குறுநூறு ‘யான் போகின்றமை
ஆயத்திற்கு உரைமின்’
என்றது
‘‘கடுங்கட் காளையொடு நெடுந்தே ரேறிக்
கோள்வல் வேங்கைய மலை பிறக் கொழிய
வேறுபல் லருஞ்சுர மிறந்தன ளவளெனக்
கூறுமின் வாழியோ வாறுசென் மாக்க
ணற்றோ ணயந்துபா ராட்டி
யெற்கெடுத் திருந்த வறனில் யாய்க்கே.’’
(ஐங்குறு.385)
இவ் வைங்குறுநூறு இன்று யான் தேரேறி வருத்தமின்றிப் போ