தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   3258


கின்றமை யாய்க்கு உரைமின் என்றது.

‘‘கவிழ்மயி ரெருத்திற் செந்நா யேற்றை
குருளைப் பன்றி கொள்ளாது கழியுஞ்
சுரநனி வாரா நின்றன ளென்பது
முன்னுற விரைந்தனி ருரைமி
னின்னகை முறுவலெம் மாயத் தோர்க்கே.’’
(ஐங்குறு.397)

இவ்  வைங்குறுநூறு  மீள்கின்றாளென்று என் வரவு ஆயத் தார்க்குக்
கூறுமின் என்றது.

‘‘வேய்வனப் பிழந்த தோளும் வெயிறெற
வாய்கவின் றொலைந்த நுதலு நோக்கிப்
பரியல் வாழி தோழி பரியி
னெல்லையி லிடும்பை தரூஉ
நல்வரை நாடனொடு வந்த மாறே.’’      
(ஐங்குறு.392)

இவ்  வைங்குறுநூறு  மீண்டும் வந்த தலைவி வழிவரல் வருத்தங்
கண்டு வருந்திய தோழிக்குக் கூறியது.

‘‘அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பைத்
தேன்மயங்கு பாலினு மினிய வவர்நாட்
டுவலைக் கூவற் கீழ
மானுண் டெஞ்சிய கலுழி நீரே.’’
         (ஐங்குறு.203)

இஃது   உடன்போய்   மீண்ட  தலைவி ‘நீ சென்ற  நாட்டு  நீர்
இனியவல்ல; எங்ஙனம் நுகர்ந்தா’யென்ற தோழிக்குக் கூறியது.

‘‘அறஞ்சா லியரோ வறஞ்சா லியரோ
வறனுண் டாயினு மறஞ்சா லியரோ
வாள்வனப் புற்ற வருவிக்
கோள்வரு மென்னையை மறைத்த குன்றே.’’
(ஐங்குறு.312)

இவ் வைங்குறுநூறு நின் ஐயன்மார் வந்துழி நிகழ்ந்தது என்னென்ற
தோழிக்குத் தலைவி தலைவனை மறைத்த மலையை வாழ்
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 01:57:28(இந்திய நேரம்)