Primary tabs

த்தியது. பிறவும் வேறுபட வருவன வெல்லாம் இதனான் அமைக்க.
இனி ஆயத்தார் கூற்று நிகழுமாறு:-
‘‘மானதர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி
தான்வரு மென்ப தடமென் றோளி
யஞ்சின ளஞ்சின ளொதுங்கிப்
பஞ்சி மெல்லடி பரல்வடுக் கொளவே.’’
இனி அயலோர் கூற்று நிகழுமாறு:-
‘‘துறந்ததற் கொண்டு துயரடச் சாஅ
யறம்புலந்து பழிக்கு மங்க ணாட்டி
யெவ்வ நெஞ்சிற் கேம மாக
வந்தன ளோநின் மடமகள்
வெந்திறல் வெள்வேல் விடலைமுந் துறவே.’’
(ஐங்குறு.393)
செய்யுளியலுட்
‘பார்ப்பான் பாங்கன்’ (தொ. பொ. செய். 190)
‘பாணன் கூந்தன்’
(தொ. பொ. செய். 191) என்னுஞ் சூத்திரங்களாற்
பார்ப்பான் முதலியோர் கூற்றுக் கூறுமாறு உணர்க.
(42)
முன்னிகழ்ந்தவை பின் தலைவனுந் தலைவியும்
நினைத்தற்கு நிமித்தமாதல்
இதுவும் பாலையாவதோர் இலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.)
முன்னர் நிகழ்ந்ததொரு நிகழ்ச்சி பின்னர் நினைத்தற்கு
முரிய நிமித்தமாம் எ-று.
என்றது, முன்னர்த் தலைவன்கண் நிகழந்ததொரு நிகழ்ச்சி
பின்னர்த் தலைவி நினைத்தற்கும் ஏதுவுமாம். முன்னர்த் தலைவிகண்
நிகழ்ந்ததொரு நிகழ்ச்சி பின்னர்த் தலைவன் நினைத்தற்கும் ஏதுவா
மென்றவாறாம்.
உம்மை எச்சவும்மையாதலிற் கூறுதற்குமாம் என்று கொள்க.
உ-ம்:
‘‘நுண்ணெழின் மாமைச் சுணங்கணி யாகந்தங்
கண்ணொடு தொடுத்தென நோக்கியு மமையாரென்
ஒண்ணுதல் நீவுவர் காதலர் மற்றவ
ரெண்ணுவ தெவன்கொ லறியே னென்னும்.’’
(கலி.4)
இது,
தலைவன் கண் நிகழ்ந்த மிகுதித் தலையளி வஞ்சமென்று
தலைவி உட்கொண்டு பிரியுங்கொல்லென நினைத்தற்கு நிமித்தமாயிற்று.
இதனானே தலைவன் செய்திகளாய்ப் பின்னர்த் தலைவி
கூறுவனவற்றிற்கெல்லாம் இதுவே ஓத்தாக