தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   251


     

    நெஞ்சமொ டறிவுபிறி தாகத்
    தவலருந் தேவியைத் தானினைந் தாற்றா
    திறுதி யெண்ணி யிகவா மன்னனை
    உறுதி மொழியி னுணர்த்துவன ராகிப்
    பல்வகைத் தோழர் படிவ வேடமொடு
    செல்வ மகதத் தெல்லை யெய்தி
    ஒருவழிப் பழகல் செல்லா துருவுகரந்து
    பெருவழி முன்னினர் பெருந்தகைக் கொண்டென்.
    பெருவழி முன்னிப் பெருந்தகை வேந்தனை
    உருமண் ணுவாவும் வயந்தக குமரனும்
    அருமறை நாவி னந்த ணாளன்
    மயக்கமில் கேள்வி யிசைச்சனு மென்றிக்
    கடனறி தோழர் காவல் போற்றி
    மடநடை மாதர் மாறிப் பிறந்துழி
    மீட்கும் வேட்கையொடு சேட்புலம் போகி
    விரிகதிர்த் திங்கள் வெண்குடை யாக
    ஒருவயிற் கவித்த லுற்ற வேந்தற்
    கருமை யமைச்சர் பெருமலை யேறிக்
    கொண்டியாந் தருதுங் கண்டனை தெளிகென
    நண்புணத் தெளித்த நாடகம் போலப்
    படைச்சொற் பாசத் தொடக்குள் ளுறீஇக்
    கலாவேற் குருசில் விலாவணை யோம்பி
    வயல்கொள் வினைஞர் கம்பலை வெரீஇக்
    கயமூழ் கெருமை கழைவளர் கரும்பின்
    விண்ட விளமடன் முருக்கித் தண்டாது
    தோகைச் செந்நெல் சவட்டிப் பாசிலை
    ஒண்கேழ்த் தாமரை யுழக்கி வண்டுகள்
    ஆம்ப லகலிலை முருக்கிக் கூம்பற்
    குவளைப் பன்மலர் குழைத்துத் தவளைத்
    தண்டுறை கலங்கப் போகி வண்டினம்
    பாட லோவாப் பழனப் படப்பைக்
    கூடுகுலைக் கமுகின் கொழுநிழ லசைந்து
    மன்றயற் பரக்கு மருதந் தழீஇக்
    குன்றயற் பரந்த குளிர்கொ ளருவி
    மறுவின் மான

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:52:42(இந்திய நேரம்)