Primary tabs
-
பெருங்கதைஉ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
கடுவளி யெடுப்ப
வெண்முகிற் பிறழு மின்னென நுடங்கித்
தன்னொளி சுடருந் தையலை யவ்வழிக்
குறுஞ்சினைப் புன்னை நறுந்தா தாடிக்
கருங்குயிற் சேவ றன்னிறங் கரந்தெனக்
குன்றிச் செங்க ணின்றுணைப் பேடை
உணர்தல் செல்லா தகறொறும் விரும்பிப்
புணர்த லுணர்வொடு பொங்குசிறை யுளரி
அளிக்குர லழைஇத் தெளித்துமன நெகிழ்க்குமக்
குயிற்புணர் மகிழ்ச்சி யயிற்கூட் டமைத்த
செஞ்சுடர் வேலி னெஞ்சிடம் போழத்
தன்ஞாழ் நவிற்றிய தாமரை யங்கைப்
பொன்ஞாண் டுயல்வரும் பொங்கிள வனமுலை
மனைப்பெருங் கிழத்தியை நினைத்தன னாகிச்
செம்மை நெடுங்கண் வெம்மை யறாஅத்
தெண்பனி யுறைத்தரத் திருத்துஞ் சகலத்துப்
பொன்பூத்தன்ன வம்பூம் பசப்பொடு
நாண்மலர்ப் புன்னைத் தாண்முதல் பொருந்திக்
கொடிக்குருக் கத்திக் கோலச் செந்தளிர்
பிடித்த விரலின னாகிக் கெடுத்த
அவந்திகை மாத ரணிநல நசைஇக்
கவன்றன னிருந்த காலை யகன்று
போமின் போமி னென்றுபுடை யோட்டும்
காவ லாளரைக் கண்டிவட் புகுதரும்
உரிமை யுண்டென வரிமா னன்ன
வெஞ்சின விடலை நெஞ்சுநிறை துயரமொடு
நீக்கச் சென்றனெ னெருந லின்றிவண்
நீக்கப் பட்டனெ னாதலி னிலையா
ஆக்கமுங் கேடும் யாக்கை சார்வா
ஆழிக் காலிற் கீழ்மேல் வருதல்
வாய்மை யாமென மனத்தி னினைஇ
நீங்கிய வெழுந்தோன் பூங்குழை மாதரை
வண்ணக் கஞ்சிகை வளிமுகந் தெடுத்துழிக்
கண்ணுறக் கண்டே தன்னமர் காதல்
மானேர் நோக்கின் வாசவ தத்தை
தானே யிவளெனத் தான்றெரிந் துணரான்
மந்திர விதியி னந்த ணாளன்
தந்தனன் மீட்டெனுஞ் சிந்தைய னாகி
உறுப்பினு நிறத்தினும் வேற்றுமை யின்மையின்
மறுத்து நோக்கு மறத்