தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   261


     

    கொழுமுகை யுடற்றிப்
    பண்கெழு தெரிவிர லங்கை சிவப்ப
    மயிலெருத் தணிமுடி மாதர்த் தோழி
    கயிலெருத் தசைத்த கைய ளாகித்
    தாழியுண் மலர்ந்த தண்செங் குவளை
    ஊழுறு நறும்போ தொருகையிற் பிடித்து
    விண்ணக மருங்கின் வேமா னியர்மகள்
    மண்ணகத் திழிதர மனம்பிறழ்ந் தாங்குக்
    கன்னிக் கடிநகர்ப் பொன்னிலத் தொதுங்கி
    விடுகதிர் மின்னென விளங்குமணி யிமைப்ப
    இடுமணன் முற்றத்து மெல்லென விழிதர
    வாயில் போந்து வைய மேறிற்
    சாய னோமெனத் தாயகட் டெடுத்துப்
    போற்றுப்பல கூற வேற்றுவன ளிருப்பப்
    பாகனை யொழித்துக் கூன்மகள் கோல்கொளப்
    பொதியிற் சோலையுட் கதிரெனக் கவினிய
    கருங்கட் சூரற் செங்கோல் பிடித்த
    கோற்றொழி லாளர் மாற்றுமொழி விரவி
    நலத்தகு நங்கை போதரும் பொழுதின்
    விலக்கரும் வேழம் விடுதி ராயிற்
    காயப் படுதிர் காவலன் பணியென
    வாயிற் கூறி வழிவழி தோறும்
    வேக யானைப் பாகர்க் குணர்த்தி
    உட்குவ ருருவங் கட்புல மருங்கிற்
    காண விடாஅ ராணையி னகற்றிக்
    கச்சுப்பிணி யுறுத்துக் கண்டகம் பூண்ட
    அச்சுறு நோக்கி னறுபது கழிந்த
    காஞ்சுகி மாக்கள் சேர்ந்துபுடை காப்பக்
    கண்டோர் விழையுந் தண்டாக் காதலொ
    டருந்தவ முண்மை யறிமி னீரெனப்
    பெருஞ்சாற் றுறூஉம் பெற்றியள் போலப்
    பைந்தொடி மகளிர் நெஞ்சுநிறை யன்பொடு
    வண்ண மலருஞ் சுண்ணமுந் தூவ
    அநங்கத் தானத் தணிமலர்க் காவிற்
    புலம்படை வாயில் புக்கனள் பொலிந்தென்.
    வாயில் புக்கபின் வைய நிறீஇ
    ஆய்வளைத் தோளி யகம்புக் கருளென
    வைய வலவன் வந்தனன் குறுகிப்
    பூண்ட பாண்டியம் பூட்டுமுதல் விட்டபின்
    மஞ்சுவிரித் தன்ன வைய வாயிற்
    கஞ்சிகை கதுமெனக்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:54:45(இந்திய நேரம்)