தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   264


     

    மர்ந்தன போல
    நெறியிற் றிரியா நிமிர்ந்துசென் றாட
    வளங்கெழுமாவினிளந்தளி ரன்ன
    நயத்தகு மேனியு நல்லோர் நாடிய
    பயப்புள் ளுறுத்த படியிற் றாகக்
    கைவரை நில்லாப் பையு ளொடுக்கி
    உட்கு நாணு மொருங்குவந் தடைதர
    நட்புடைத் தோழி நண்ணுவன ளிறைஞ்ச
    மேதகு வையத்தின் மெல்லென விழிந்து
    தாதுகு புனைமலர்த் தண்பூங் காவினுட்
    சூடக முன்கைச் சுடர்க்குழை மகளிரொ
    டாடுதலானா வவாவொடு நீங்கி
    வனப்பெனப் படூஉந் தெய்வந் தனக்கோர்
    உருவுகொண் டதுபோற் றிருவிழை சுடரத்
    தன்னமர் தோழி தம்புறத் தசைஇ
    அன்ன நாண வண்ணலைக் கவற்றாப்
    பொன்னரிக் கிண்கிணி புடைபெயர்ந் தரற்ற
    அரிச்சா லேகத் தறைபல பயின்ற
    திருக்கிளர் மாடஞ் சேர்ந்துவலங் கொண்டு
    கழிபெருஞ் சிறப்பிற் கன்னி மகளிர்
    அழியுந் தான மவ்விடத் தருளி
    நான்முகன் மகளிர் நூன்முதற் கிளந்த
    ஒழுக்கிற் றிரியா ளுறுபொருள் வேண்டும்
    வழுக்கா வந்தணர் வருக யாவரும்
    விலக்கவு நீக்கவும் பெறீஇ ரென்றுதன்
    தலைத்தாண் முதியர்க்குத் தானே கூறி
    நோன்புமுத றொடங்கித் தேங்கமழ் கோதை
    தலைநாட் டானந் தக்கவை யளித்தலிற்
    பலநா ணோற்ற பயனுண் டெனினே
    வளமையும் வனப்பும் வண்மையுந் திறலும்
    இளமையும் விச்சையு மென்றிவை பிறவும்
    இன்பக் கிழமையு மன்பே ருலகினுள்
    யாவர்க் காயினு மடையு மடையினும்
    வார்கவுள் யானை வணக்குதற் கியைந்த
    வீணை விச்சையொடு விழுக்குடிப் பிறவரிது
    விழுக்குடிப் பிறந்திவ் வீறொடு விளங்கிய
    வழுக்கா மரபின் வத்தவர் பெருமகன்
    உதயண

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:55:23(இந்திய நேரம்)