தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   271


     

    முற்ற நோன்பு முடியு மாத்திரம்
    கொற்றக் கோமான் குறிப்பின் றாயினும்
    வினவ வேண்டா செலவென விரும்பி
    மெல்லென் கிளவி சில்லென மிழற்றிப்
    புனைமாண் வையம் பொருக்கெனத் தருகென
    வினைமா ணிளையரை யேவலின் விரும்பி
    நாப்புடை பெயரா மாத்திரம் விரைந்து
    காப்புடை வையம் பண்ணி யாப்புடை
    மாதர் வாயின் மருங்கிற் றருதலின்
    கோதை யாயம் பரவ வேறித்
    திருமலர் வீதி போதந் தெதிர்மலர்க்
    காவினுட் பொலிந்த வோவக் கைவினைக்
    கண்ணார் மாட நண்ணுவன ளிழிந்து
    தேனிமிர் படலைத் திருவமர் மார்பனைத்
    தானினி தெதிர்ந்த தானத் தருகே
    அன்று மவாவி நோக்கின ணன்றியல்
    இருவரு மியைந்து பருவரல் காட்டிப்
    புறத்தோர் முன்னர்க் குறிப்புமறைத் தொடுக்கிக்
    கருங்கண் டம்மு ளொருங்குசென் றாட
    வந்தும் பெயர்ந்து மன்றைக் கொண்டும்
    காலையும் பகலு மாலையும் யாமமும்
    தவலருந் துன்பமொடு கவலையிற் கையற்
    றைந்நாள் கழிந்த பின்றைத் தன்மேல்
    இன்னா வெந்நோய் தன்னமர் தோழிக்
    குரைக்கு மூக்கமொடு திருத்தகு மாதர்
    வான்றோய் மண்டபம் வந்தொருங் கேறித்
    தேன்றோய் கோதை சில்லென வுராஅய்
    இடுகிய கருங்கண் வீங்கிய கொழுங்கவுட்
    குறுகிய நடுவிற் சிறுகிய மென்முலை
    நீண்ட குறங்கி னிழன்மணிப் பல்கலம்
    பூண்ட வாகத்துப் பூந்துகி லல்குல்
    அயிரா பதியெனுஞ் செயிர்தீர் கூனியைத்
    தடந்தோண் மாதர் கொடுங்கழுத் தசைஇ
    நின்ற செவ்வியு ளொன்றா ரட்ட
    வாமான் றிண்டேர் வத்தவர் பெருமகன்
    கோமாட் கோடிய குறிப்பின னாகித்
    திகழ்தரு மதியிற் றிருமெய் தழீஇ
    வெள்ளைச்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:56:49(இந்திய நேரம்)