தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   274


     

    மன்னவன் கூற மற்றது நன்றென
    இன்னுயிர்த் தோழ ரியைந்தனர் போகித்
    தண்ணரும் பினமலர் தகைபெரி துடைய
    ஒண்ணிறத் தளிரோ டூழ்பட விரீஇக்
    கண்விழவு தரூஉங் கண்ணி கட்டி
    அன்ன மென்னடை யரிவை காணப்
    புன்னையு ஞாழலு மகிழும் பொருந்திய
    துன்னரும் பொதும்பிற் றொத்திடைத் துளங்கத்
    தளிர்தரு கண்ணி தம்மு ளறிய
    . ஒளிபெற வைத்தவ ணொளித்த பின்னர்
    வளங்கெழு வாழை யிளஞ்சுருள் வாங்கித்
    தாமரைப் பொய்கையுந் தண்பூங் கேணியும்
    காமன் கோட்டமுங் கடிநகர் விழவும்
    மாமலர்க் கோதை மடமொழி யூரும்
    வையக் கஞ்சிகை வளிமுகந் தெடுக்கவத்
    தெய்வப் பாவையைத் தேனிமிர் புன்னைத்
    தாண்முதல் பொருந்தித் தானவட் கண்டதும்
    காமர் நெடுங்கண் கலந்த காமமும்
    இன்னவை பிறவுந் தன்முத லாக
    உள்ளம் பிணிப்ப வுகிரிற் பொறித்து
    வள்ளிதழ்க் கண்ணி வளம்பெறச் சூட
    அரும்பினும் போதினும் பெருந்தண் மலரினும்
    முறியினு மிலையினுஞ் செறியக் கட்டி
    ஒருங்குபுறம் புதைஇ யுதயண குமரனும்
    திருந்திழைத் தோளி விரும்புபு நோக்கச்
    சிதர்சிறை வண்டின் செவ்வழி புணர்ந்த
    ததரிதழ் ஞாழற் றாழ்சினைத் தூக்கிப்
    பைந்தாட் பொருந்திச் செஞ்சாந் துதிரத்
    திருமலி யகலஞ் சேர முயங்கிப்
    பொருமுர ணண்ணலும் போந்த பொழுதின்
    ஆடுகொம் பன்ன வம்மென் மருங்குற்
    பாடகச் சீறடிப் பல்வளை மகளிரைப்
    பக்க நீக்கிப் பைந்தொடிக் கோமாள்
    நற்பூம் பொய்கை புக்குவிளை யாடும்
    உள்ள மூர்தர வொழிநிலத் தோங்கிக்
    கொடுக்குஞ் சீர்க்கமு மடுத்தூழ் வளைஇய

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:57:26(இந்திய நேரம்)