தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   275


     

    முத்த மாலையும் வித்தக மாகிய
    உளிப்பெருங் கம்மமு முகத்துமுத லுறீஇத்
    திண்டூட் சதுரங் கொண்ட வெல்லையுட்
    சீயமு மேறுந் திருவும் பொய்கையும்
    சேயிதழ் மலருங் காம வல்லியும்
    மேயினர் விழைய மேதகப் புணர்ந்த
    கோலக் கோயுட் கொண்டுநிறை யமைத்த
    சூடமை சாந்து மீடறிந்து புனைந்த
    மதங்கமழ் நறுமலர்ச் சதங்கைத் தாமமும்
    சாலக் கொள்கெனத் தன்வயிற் றிரியாக்
    கோலக் கூன்மகட் கறியக் கூறிச்
    செவிலித் தாயுந் தவ்வையு மாயமும்
    அகலப் போகிய வமைய நோக்கி
    அன்னம் போல மென்மெல வொதுங்கி
    நன்முலைத் தீம்பா றம்மனை கொடுப்ப
    ஒருங்குண் டாடிய கருங்கண் மதிமுகத்
    தந்த ணாட்டி யாப்பியா யினியெனும்
    மந்திரத் தோழியொடு மணங்கமழ் காவின்
    அணித்தழை மகளி ரருங்கடிக் கமைந்த
    மணிச்சுதைப் படுகான் மருங்கணி பெற்ற
    அளப்பருங் குட்டத் தாழ்ந்த பொய்கைத்
    தாட்கொ ளெல்லையுள் வாட்கண் சிவப்பக்
    குளித்துங் குடைந்துந் திளைத்து விளையாடிக்
    கூட்டமை நறும்புகை யூட்டமைத் தியற்றிக்
    கண்ணெழிற் கலிங்கந் திண்ணென வசைத்துப்
    பார மாகி நீரசைந் தொசிந்த
    காரிருங் கூந்த னீரறப் புலர்த்தி
    ஏற்ப முடித்துப் பூப்பிறி தணியாள்
    முத்தப் பேரணி முழுக்கல மொழித்துச்
    சிப்பப் பூணுஞ் செம்பொற் கடிப்பும்
    ஏக வல்லியு மேற்பன வணிந்து
    தாமரை யெதிர்போது வாங்கி மற்றுத்தன்
    காமர் செவ்வியிற் காய்நலம் பெற்ற
    நாம மோதிரந் தாண்முதற் செறித்துப்
    புனைநறுஞ் சாந்தமுந் துணைமலர்ப் பிணையலும்
    மனநிறை கலக்கிய கனல்புரை நோக்கத்துப்
    பொன்வரை மா

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:57:38(இந்திய நேரம்)