தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   273


     

    ஈங்கிது கேட்கென விசைச்ச னுரைக்கும்
    மன்னிய விழுச்சீர் மகதத்து மகளிர்
    நன்னிறை யுடையர் நாடுங் காலை
    மன்னவ னாணையு மன்ன தொன்றெனாக்
    கன்னி தானுங் கடிவரை நெஞ்சினள்
    வேட்டுழி வேட்கை யோட்டா வொழுக்கினள்
    அற்றன் றாயிற் கொற்றங் குன்றித்
    தொடிகெழு தோளி சுடுதீப் பட்டெனப்
    படிவ நெஞ்சமொடு பார்ப்பன வேடம்
    கொண்டான் மற்றவன் கண்டோர் விழையும்
    வத்தவர் கோமா னென்பதை யறிவோர்
    உய்த்தவட் குரைப்ப வுணர்ந்தன ளாகிப்
    பெறுதற் கரிய பெருமக னிந்நகர்
    குறுக வந்தனன் கூறுதல் குணமென
    நெஞ்சுநிறை விட்டன ளாகு மன்றெனின்
    ஈன மாந்த ரொப்ப மற்றிவர்
    தான மேற்ற றகாஅ தென்றுதன்
    நுண்மதி நாட்டத்து நோக்கின ளாமது
    திண்மதித் தன்றெனத் திரிந்தவன் மறுப்ப
    ஒருப்பா டெய்தி யுற்றவ ரெல்லாம்
    குறிப்பின் வாரா நோக்கெனக் குருசிற்கு
    மறுத்த வாயிலொடு வலிப்பன ராக
    உயிரொன் றாகி யுள்ளங் கலந்தவள்
    செயிரின் றாகிய செங்கடை நோக்கம்
    அணங்கெனக் காயிற் றவட்குமென் னோக்கம்
    அத்தொழி னீர்த்தென வெய்த்தன னென்ன
    உரைப்பத் தேறா வுயிர்த்துணைத் தோழரைத்
    திருச்சேர் மார்பன் றேற்றுதல் வேண்டி
    மலரினு மரும்பினுந் தளிரினும் வனைந்த
    சந்தக் கண்ணிதன் சிந்தை யறியப்
    பூக்குழை மாதர் நோக்கிடை நோக்கிப்
    படுகாற் பொய்கைப் பக்க நிவந்த
    நறுமலர்ப் பொதும்பர் நாற்றுவனம் போகி
    மறைந்தன மிருந்த காலைமற் றவளென்
    கண்ணி கொள்ளிற் கலக்கு முள்ளம்
    திண்ணி தாகுத றெளிமி னீரென
    மன்னவ னுரைத்தனன் மற்றவர்க் கெடுத்தென்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:57:14(இந்திய நேரம்)