யர்
நீரொடு பொலிந்தசுட ரோலை
அடுத்ததில கத்தினொ டணிந்தவள கத்தார்
வடித்தசிறு நோக்கொடு முகத்தொழில் வகுத்தார்.
455.
பூவிரி
குழற்சிகை மணிப்பறவை போகா
ஆவிகள கிற்புகைகள் விம்மியவ ரொண்கண்
காவியென வூதுவன கைத்தலம் விலங்க
மேவியிவை காந்தளென வீழமிக நொந்தார்.
456.
சுரும்பொடு
சுழன்றுள குழற்றொகை யெழிற்கை
கரும்பொடு கலந்துள களித்தவவர் தீம்பண்
நரம்பொடு சிவந்துள விரற்றலை யெயிற்றேர்
அரும்பொடு பொலிந்ததுவர் வாயமிழ்த மன்றே.
457.
கணங்குழை
மடந்தையர் கவின்பிற ழிருங்கண்
அணங்குற விலங்குதொ றகம்புலர வாடி
மணங்கம ழலங்கலுடை மைந்தர்த மனந்தாழ்
வணங்கிடை வணங்குதொ றணங்கென வணங்கும்.
458.
நெய்யலர்
குழற்றொகை நெருப்பினடு மென்பார்
மையலர் நெடுங்கணிவை வல்லகொலை யென்பார்
தொய்யிலிள மென்முலையி னீர்சுடுதி ராயின்
உய்யல மெனத்தொழுது மைந்தர்