அருள்மிகு கங்காதரேசுவரர் திருக்கோயில்
சென்னையில் அமைந்தகரை வட்டத்தில் உள்ள புரசைவாக்கம் கங்காதரேசுவரர் திருக்கோயில் பிற்காலச் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது. ஆனால் கல்வெட்டுகள் விசயநகரர் காலத்திலிருந்தே கிடைக்கின்றன. தற்போது இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. பழமையான கட்டடக்கலையின் எச்சங்கள் எதுவும் காணக்கிடைக்கவில்லை. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் பெரிய திருக்குளத்தைக் கொண்டுள்ளது. சிற்பங்களும் கோயில் புனரமைப்பின் போது நிர்மாணிக்கப்பட்டவையாகவே உள்ளன. சுமார் ஐம்பது அடி உயரம் கொண்ட சிவபெருமானின் சுதையாலான சிற்பம் இக்கோயிலுக்கு தனித்துவமாக அமைந்துள்ளது.
- பார்வை 1740