அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில்
கன்வ மகரிஷி முக்தி அடைந்த திருத்தலம். சுந்தரர் மனைவி சங்கிலி நாச்சியார், இவ்வூரில் பிறந்தவர். புஷ்பரதேஸ்வரரை வழிபட்ட அவர், இங்கிருந்து திருவொற்றியூர் சென்று சிவசேவையில் ஈடுபட்டு, பின்பு சுந்தரரை மணந்து கொண்டார். இவருக்கும் இங்கு சன்னதி இருக்கிறது. அமாவாசை, மாசி மகத்தன்று சங்கிலியாருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்படுகிறது. ஊரின் பெயர் ஞாயிறு என்பதால் சூரிய வழிபாடு இங்கு சிறப்புடையதாக கருதப்படுகிறது. சித்திரை மாதம் முதல் வாரம் (1-7ம் தேதி), காலை 6:10 மணிக்கு சிவன் மற்றும் அம்பிகை மீது சூரிய ஒளி விழுகிறது.
- பார்வை 3026