அருள்மிகு மேல்சித்தாமூர் பார்சுவநாதர் திருக்கோயில்
தமிழகத்தின் செஞ்சி வட்டம் வல்லம் அருகில் உள்ள மேல்சித்தாமூர் சமண சமயத்தின் தலைமை ஊராக இருந்து வருகின்றது. இங்குள்ள சமண மடம் ஜினகாஞ்சி மடம் என்று அழைக்கப்படுகின்றது. இவ்வூரில் பழைய சமணப்பள்ளிகளும் கோயில்களும் உள்ளன. மேல்சித்தாமூரில் உள்ள பார்சுவநாதர் கோயிலின் கருவறை, அர்த்த மண்டபம், முகமண்டபம், மானஸ்தம்பம் ஆகியவை கி.பி.16ஆம் நூற்றாண்டு கலைப்பாணியை கொண்டுள்ளது. எஞ்சியவை 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவையாகும். இங்குள்ள நேமிநாதர் சிற்பம் சென்னை மயிலாப்பூரில் இருந்த சமணக் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்டதாகும்.
- பார்வை 1747