அருள்மிகு வளத்தி ஆதிநாதர் ஜினாலயம்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜினாலயம் என்றழைக்கப்படும் சமணக் கோயில்களில் வளத்தி ஆதிநாதர் ஜினாலயம் குறிப்பிடத்தக்கது. செஞ்சி சேத்துப்பட்டு துக்கிடியில் உள்ள சைனக் கிராமங்களுள் ஒன்று வளத்தி ஆகும். இந்த கோயிலில் இருக்கும் கடவுளான ஆதிநாதர் சமணத் தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் முதலாம் தீர்த்தங்கரர் ஆவார். ஸ்ரீ ஆதிநாதர் திகம்பரர் சமணக் கோயில் மேலும் நைனார் கோயில் எனவும் அறியப்படுகிறது. வளத்தி சமணக்கோயிலில் உபவாசம் சிறப்பாக பின்பற்றப்படுகிறது. பெண்கள் உபவாசத்தை மேற்கொண்டு தீர்த்தங்கரர்களின் பெயர்களை ஐந்து முறை கூறிவிட்டு பின் உணவு உட்கொள்கின்றனரர்.
- பார்வை 1451