Primary tabs
-
விலாங்கு மீன் (Eel)
இம்மீனின் தலை எது? வால் எது? என்று எளிதில் பிரித்தறிய இயலாது நீளமான உருளை வடிவில் பாம்பினைப் போன்ற தோற்றங்கொண்டிருக்கும். விலாங்கு மீன்களில் குளிரி, கருங்குளிரி, குழிப்பாம்பு, அணைக்குத்தி, பொரிவிலாங்கு என்ற பலவகைகள் உள்ளன. சிலவகை விலாங்கு மீன்கள் தம் இனப்பெருக்கத்திற்காக மேற்கொள்ளும் நீண்ட தூர கடற்பயணம் இன்றளவும் ஆய்வாளர்களின் ஆய்வுக்குரியவையாக உள்ளது.
விலாங்கு மீன்