தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • ஓலைவாளை மீன்கள் (அ) நாடா மீன்கள் Ribbon Fishes

    முனைவர் ச.பரிமளா
    பேராசிரியர் மற்றும் தலைவர்
    தொல்லறிவியல் துறை

    தமிழகக் கடலோரப் பகுதியில், ஓலைவாளை மீன்கள் கார்த்திகை மாதத்தில் மிக அதிகமாகக் கிடைப்பதால் கார்த்திகை வாளை மீன்கள் என்றழைக்கப்படுகின்றன. இதன் மேல்புறம் வெண்மையாகவும் சுண்ணாம்பு போன்ற வழவழப்பு தன்மையும் கொண்டிருப்பதால் சுண்ணாம்பு வாளை என்றும் அழைக்கப்படுகின்றன. இவை பொதுவாக ஆங்கிலத்தில் முடி வாலிகள் (hairy tails) என்று பெயர் பெறுகின்றன.

    ஓலைவாளை மீன்கள்

    இந்திய அளவில் பிடிக்கப்படும் இம்மீன்களில் 40 விழுக்காடு தமிழகத்திலும் 22 விழுக்காடு கேரளத்திலும் 16 விழுக்காடு ஆந்திராவிலும் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் கூட்டங்கூட்டமாக வாழும் இயல்பு கொண்டவை இவை நீரின் ஆழத்தில் காணப்பட்டாலும் அடிக்கடி நீரின் மேல் மட்டத்திற்கும், கடலோரத்திற்கும் வரும் தன்மையுடையன. இம்மீன்கள் மிக மெலிந்த, நீண்ட தட்டையான உடல் அமைப்பைப் பெற்றுள்ளதால், அதிகமாகப் பிடிக்கப்படும் காலங்களில் இவை வெயிலில் உலர்த்தப்பட்டு கருவாடாகக் காய வைக்கப்பட்டு பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உண்பதற்குச் சுவையான இம்மீன்கள் டிரைகியூரிடே (Trichiridae) குடும்பத்தில் ஆறு இனங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:16:56(இந்திய நேரம்)