தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உருத்திராட்ச மரம்

 • உருத்திராட்ச மரம்

  முனைவர் கு.க.கவிதா,
  உதவிப் பேராசிரியர்,
  சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

  ருத்ராக்ஷா ஒரு அழகான மரமாகும். இந்த மரத்தில் காய்கள் விளைகின்றன. அவைகள் சிறிதளவிலும், இலந்தைப் பழம் வடிவிலும் இருக்கும். இதனை உலரவைத்து நூலால் கோர்த்து, மாலையாகவும், கை மணிக்கட்டிலும், வளையலாகவும் அணிந்து கொள்வார்கள். இந்த மரத்தை இந்து சமுதாய மக்கள் தெய்வீக மரமாகக் கருதி கோயில்களில் வைத்து வணங்குகின்றனர். ‘உத்திரன்’ என்றால் சிவனையும் ‘அட்சம்’ என்றால் கண்ணையும் குறிக்கும். ‘ருத்திராட்சம்’ என்றால் சிவனின் கண்களிலிருந்து தோன்றியது என்பது பொருள். தாவரப்பெயர் இலியோகார்பஸ் கேனிடிரஸ் (Elaeocarpus ganitris Roxb.). இது இலியோகார்பசியோ (Elecocarpaceae) குடும்பத்தைச் சார்ந்தது.

  உருத்திராட்ச மரம்

  வளரியல்பு :

  இது இமயமலைச் சாரலில் நேபாளம் போன்ற இடங்களில் பயிராகும். இது அக்கமணி, கண்மணி, சிவநேத்திரம், உத்திராட்சம் என வேறு பல பெயர்களிலும் வழங்கப்படுகின்றன. ருத்திராட்ச மரம் சுமார் 100 ஆண்டுகள் வரை இருக்கும். இதில் 1-18 முகங்கள் உள்ளன.

  பயன்கள் :

  இலையின் சாறு கற்ப செந்தூரங்களுக்கு உபயோகமாகிறது. கொட்டையைத் தேன்விட்டு உரைத்து நாக்கில் தடவ விக்கல், பித்த மயக்கம், மரணத்தை உண்டாக்கும் கபம் இவைகளைப் போக்குகிறது. இதில் மின்காந்த பண்புகள் இருப்பதால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு மன அமைதி கிடைக்கும். தியான மாலையில் முகங்கள் ஒன்றுடன் ஒன்று பொருத்துவதால் மின் துடிப்புகள் உண்டாகி மூளைக்குப் புத்துணர்ச்சியும், இதயத்தின் துடிப்பில் ஒரு சீரமைப்பும் உண்டாகிறது. இரவில் 1 டம்ளர் நீரில் 5 ருத்திராட்சத்தைப் போட்டு வைத்து காலையில் குளித்து விட்டு வெறும் வயிற்றில் நீரை மட்டும் அருந்தினால் கனச்சூடு குறையும்.

  நோக்கீட்டு நூல் :

  நோய்களைக் குணப்படுத்தும் இந்துக் கோயில் மரங்கள் அக்க கவுசர் மணிமேகலை பிரசுரம், சென்னை (2008)

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:57:41(இந்திய நேரம்)