தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பருப்புக்கீரை / சக்கரவர்த்திக்கீரை

 • பருப்புக்கீரை / சக்கரவர்த்திக்கீரை

  முனைவர் ந.நாகராஜன்
  உதவிப் பேராசிரியர்
  தொல்லறிவியல் துறை

  தாவரவியல் பெயர் : Chenopodium album L.

  குடும்பம் : Chenopodiaceae

  ஆங்கிலம் : Lamb’s quarters

  வளரிடம் : இந்தியாவில் இயற்கையாக வளர்கிறது. இதன் இலைகள் மற்றும் விதைகளுக்காக 4250 மீ உயரம் வரை உள்ள இடங்களில் வளர்க்கப்படுகிறது. தான்ய பயிர் மற்றும் கீரை வகையாக மேற்கு இமாலய பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

  வளரியல்பு : மணமற்ற குறுஞ்செடி, 30-90 செ.மீ உயரம் வளரக்கூடியது. இலைகள் நீண்ட காம்புடையவை. மடல் மெல்லியது. மலர்கள் இருபாலின. கணுக்களில் நெறுங்கியவை, விதைகள் பக்க வளர்ச்சியுடையவை.

  மருத்துவப் பயன்கள் : இலைகளும், விதைகளும் சத்துப் பொருள் கொண்டவை. கீரையாக உட்கொள்ளப்படுகிறது. இலைச்சாறு அல்லது கசாயம் வயிற்றுப் புழுக்களுக்கு எதிரானது. மலமிளக்கி, கல்லீரல் நோய்கள் மற்றும் கணையத்தின் வீக்கம் தீர்க்க விதைகள் பயன்படுகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:31:49(இந்திய நேரம்)