Primary tabs
-
தென்பெண்ணை ஆறு
தென்பெண்ணை ஆறு தமிழ்நாட்டின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டம், நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) பிறந்து, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 391 கிமீ தூரம் பாய்ந்து இறுதியில் தமிழ்நாட்டின் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் நீர்ப் பிடிப்புப் பகுதிகள் சுமார் 14,449 கி.மீ ஆகும். மார்கண்டாறு, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு இதன் முக்கிய துணையாறுகளாகும்.