தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Database Of Thamlzhagam

  • பவானி ஆறு

    பவானி ஆறு, காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். இது தமிழகத்தின் நீலகிரி மலைத்தொடரில் உள்ள குந்தா மலைப்பகுதியில் தோன்றி மேற்கு நோக்கி கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பட்டி பள்ளத்தாக்கில் பாய்ந்து அங்குள்ள முக்கலி என்னுமிடத்தில் 120 பாகை திரும்பி கிழக்கு நோக்கி நீலகிரி மாவட்டத்தில் பாய்ந்து மீண்டும் தமிழகத்துக்குள் வருகிறது.
    மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆறு சமவெளியை அடைகிறது. பின் சிறுமுகை வழியாக கொத்தமங்கலம் அருகே கீழ் பவானி அணைக்கட்டை அடைகிறது அங்கு இது பவானி சாகர் நீர்த்தேக்கத்தை உருவாக்குகிறது. பவானி சாகர் நீர்த்தேக்கத்தில் மோயார் ஆறானது இணைந்து கொள்கிறது.
    இது ஈரோடு மாவட்ட சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ளது. பின் பவானி ஆறு கோபிச்செட்டிப்பாளையம் வழியாக பாய்ந்து பவானி நகரில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. காவிரி ஆற்றுடன் கலக்கும் முன் இதிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் தொடங்குகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 11:59:55(இந்திய நேரம்)