தமிழ் மண்டபம்
பாடம்
Lesson
இடம் | : கரிகாலன் மாளிகை |
பங்கேற்போர் | : கடியலூர் உருத்திரங் கண்ணனார், கரிகாலன் மற்றும் பலர் |
வீரர் | : மன்னர் கரிகாலன் வாழ்க! |
மக்கள் | : வாழ்க! வாழ்க! (மன்னர் வருகிறார்) |
கரிகாலன் | : வணக்கம்! எல்லாருக்கும் வணக்கம்! |
வீரர் | : மன்னா! தமிழ்ப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் வந்துள்ளார். |
கரிகாலன் | : அப்படியா! நன்று! வரச்சொல். (புலவர் வருகிறார்) |
புலவர் | : மன்னா வணக்கம்! வாழ்க நீ! |
கரிகாலன் | : வாழ்த்துக்கு நன்றி புலவரே! தங்கள் வருகைக்கு நன்றி புலவரே! |
புலவர் | : மன்னா! பட்டினப்பாலை என்று ஒரு நூல் எழுதி உள்ளேன். |
கரிகாலன் | : அப்படியா!..... அதில் நீங்கள் சொல்ல வருவது என்ன புலவரே! |
புலவர் | : இந்த நூலில், சோழநாடு, காவிரி ஆறு, அது கடலில் கலக்கும் இடம், போன்ற பலவற்றைப் பற்றிச் சொல்லி உள்ளேன் மன்னா! இதற்குக் காரணமான உன் சிறப்பும் அதில் உள்ளது மன்னா! |
கரிகாலன் | : நன்றி புலவரே ! நன்றி! நீங்கள் எழுதிய பாடலைப் படியுங்கள் கேட்போம். |
புலவர் | : வசை இல் புகழ், வயங்கு வெண்மீன் திசை மாறித் தெற்கு ஏகினும் வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடல் காவிரி புனல்பரந்து பொன் கொழிக்கும் .................................................... (புலவர் பாடிக் கொண்டே இருக்கிறார்) |
மக்கள் | : ஆ! அருமை! அருமை! |
கரிகாலன் | : சிறப்பான கருத்துகள்! வாழ்க புலவரே! வாழ்க புலவரே! |
புலவர் | : உன் வாழ்த்திற்கு நன்றி மன்னா! நன்றி! |
கரிகாலன் | : புலவரே! இதோ பரிசு; நூறு ஆயிரம் பொன்! ஒரு நூறு ஆயிரம் இல்லை பதினாறு நூறாயிரம் பொன்! அதோடு பதினாறு கால் மண்டபம் ஒன்று! வாழ்க புலவரே! |
புலவர் | : நன்றி! நன்றி! மன்னா நன்றி! மக்களே நன்றி! |
வீரர் | : மன்னன் வாழ்க ! |
மக்கள் | : வாழ்க! வாழ்க! |
வீரர் | : புலவர் வாழ்க! |
மக்கள் | : வாழ்க! வாழ்க! |