தமிழ் மண்டபம்

தமிழ் மண்டபம்

பாடம்
Lesson


காட்சி - 4

இடம் : பதினாறுகால் மண்டபம்
பங்கேற்போர் : போர் வீரர்கள், ஆசிரியர், மாணவர்

 
மக்கள் : ஐயா! ஐயா!
ஆசிரியர் : என்ன! என்ன!
ஏன் ஓடி வருகிறீர்கள்?
மக்கள் : ஐயா! நம் நாடு !
நம் வீடு! நம் மண்டபம்!........
ஆசிரியர் : என்ன! என்ன!
மக்கள் : நம் நாடு போய்விட்டது போரில் நம் நாடு போய்விட்டது
ஐயா! ஐயா!
பாண்டிய மன்னன் நம் நாட்டை எடுத்துக்கொண்டான் ஐயா!
ஆசிரியர் : ஆ!........
மாணவர்கள் : ஆ! ஐயோ! ஐயோ!
ஐயா! விட மாட்டோம்
மண்டபம், ........... தூண்கள்,......... பதினாறு தூண்கள்
இவற்றை இடிக்க விடமாட்டோம்.

(மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறார்கள்)

(பாண்டிய மன்னனின் குதிரைகள், யானைகள், வீரர்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.)