தமிழ் மண்டபம்

தமிழ் மண்டபம்

பாடம்
Lesson


காட்சி - 5

இடம் : பதினாறுகால் மண்டபம்
பங்கேற்போர் : பாண்டிய மன்னன், ஆசிரியர், வீரர்கள், மாணவர்கள், மக்கள்.

 
வீரர் : மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னர் வாழ்க!
வீரர்கள் : வாழ்க! வாழ்க!
பாண்டியன் : யார் அங்கே?
வீரர்கள் : சொல்லுங்கள் மன்னா!
பாண்டியன் : இன்னும் இந்த மண்டபம் இடிக்கப்படவில்லையா!
வீரர்கள் : இன்னும் சிறிது நேரத்தில்...
பாண்டியன் : ஏன்? இவ்வளவு நேரம் !
வீரர்கள் : மன்னா!
பாண்டியன் : ம்............
வீரர் 1 : மண்டபத்தை இடிக்க விடாமல் தடுக்கிறார்கள்!
பாண்டியன் : யார்? சோழனின் படை வீரர்களா?
ஆசிரியர் : மன்னா! வணக்கம்
நான் இந்த மண்டபத்தில், தமிழ் சொல்லித் தரும் ஆசிரியர்.
பாண்டியன் : அப்படியா! வணக்கம்.
ஆசிரியர் : சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் நீங்கள்!
பாண்டியன் : சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் நீங்கள்!
பாண்டியன் : நன்று! நன்று!!
ஆசிரியர் : தமிழ்ப்பள்ளி நடந்து வரும் இந்த மண்டபத்தை நீங்கள் இடிக்கலாமா?
கரிகால் மன்னன் தமிழுக்குக் கட்டிய மண்டபத்தை இடிக்கலாமா?
கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற புலவர் புகழ் சொல்லும் இந்த மண்டபத்தை இடிக்கலாமா?
பாண்டியன் : ஆசிரியரே இது தமிழ் மண்டபமா!
ஐயோ! இதை நான் இடிக்க நினைத்தேனே!
வீரர்களே! திரும்பிப் போங்கள்!
மண்டபத்தை இடிக்க வேண்டாம்!
ஆசிரியர் : நன்றி மன்னா! நன்றி
பாண்டிய மன்னா!
கரிகால் மன்னன் சிறப்பையும் உருத்திரங் கண்ணனார் சிறப்பையும் மட்டுமே இதுவரை இந்த மண்டபம் காட்டியது. இனி உன் சிறப்பையும் காட்டும்.
மாணவர்கள் : தமிழ் வாழ்க!
மக்கள் : வாழ்க! வாழ்க!
மாணவர்கள் : தமிழ் மண்டபம் காத்த பாண்டிய மன்னன்!
மக்கள் : வாழ்க! வாழ்க!
மாணவர்கள் : தமிழ் மண்டபம் கட்டிய சோழ மன்னன் கரிகாலன்!
மக்கள் : வாழ்க! வாழ்க!
மாணவர்கள் : புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்!
மக்கள் : வாழ்க! வாழ்க!
மாணவர் : ஆசிரியர்!
மக்கள் : வாழ்க! வாழ்க!
மாணவர் : தமிழ் மண்டபம்!
மக்கள் : வாழ்க! வாழ்க!