தமிழ் மண்டபம்

தமிழ் மண்டபம்

மையக்கருத்து
Central Idea


தமிழ் நாட்டை ஆண்ட மன்னர்கள் தமிழ்மொழி மீது அன்பு கொண்டு இருந்தனர். தமிழ் உயரப் பொன்னும் பொருளும் தந்தனர்.

கரிகாலன் என்ற மன்னன், கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற புலவர்க்குப் பொன், பொருள் கொடுத்தான். அதோடு பதினாறுகால் மண்டபம் ஒன்றையும் கட்டித் தந்தான். புலவர் பட்டினப்பாலை என்ற நூலை எழுதியதற்காக இப்பரிசை மன்னன் அவருக்குத் தந்தான்.

அவருக்காகக் கரிகாலன் கட்டித் தந்த மண்டபத்தைப் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த பாண்டிய மன்னன் மாறவர்மன் இடிக்க வந்தான். இது தமிழ்ப் புலவருக்காக எழுப்பித் தரப்பெற்ற மண்டபம் என்பதை அறிந்தான்;இடிக்காமல் விட்டு விட்டான்.

The rulers of TamilNadu loved Tamil language very much. For its growth and glory, they contributed much.

King Karikalan gave a lot of money and gold to Kadiyalur Uruthiran Kannanar, a great Tamil poet. He built a big hall of sixteen pillars upon this poet for his great work Pattinappalai.

Later on Maravarman, a Pandya king decided to destroy this Mandapam after a victory in a war. It was told to him that the Mandapam was built in honour of a great Tamil Poet.

Maravarman did not destroy it.