தமிழ் மண்டபம்

தமிழ் மண்டபம்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  கரிகாலன் .......................... நூறு ஆயிரம் பொன்னைக் கடியலூர் உருத்திரங் கண்ணனாருக்குத் தந்தான்.

கரிகாலன் பதினாறு நூறு ஆயிரம் பொன்னைக் கடியலூர் உருத்திரங் கண்ணனாருக்குத் தந்தான்.

2.  தமிழ் மண்டபத்தில் இருந்த தூண்களின் எண்ணிக்கை ..............................

தமிழ் மண்டபத்தில் இருந்த தூண்களின் எண்ணிக்கை பதினாறு

3.  ............................ என்ற மன்னன் பட்டினப்பாலை நூலைப் பாடக் கேட்டான்.

கரிகாலன் என்ற மன்னன் பட்டினப்பாலை நூலைப் பாடக் கேட்டான்.

4.  மாணவர்கள் .............................. மண்டபத்தில் தமிழ்ப்பாடம் கற்றனர்.

மாணவர்கள் பதினாறுகால் மண்டபத்தில் தமிழ்ப்பாடம் கற்றனர்.

5.  கால் என்பது மண்டபத்தில் உள்ள ................................... குறிக்கும்.

கால் என்பது மண்டபத்தில் உள்ள தூண்களைக் குறிக்கும்.

6.  தமிழ் மண்டபத்தை இடிக்க வந்த பாண்டிய மன்னன் பெயர் ........................

தமிழ் மண்டபத்தை இடிக்க வந்த பாண்டிய மன்னன் பெயர் மாறவர்மன் சுந்தர பாண்டியன்

7.  பாண்டியன் தமிழ்ப்பற்றுக் காரணமாக ............................ இடிக்கவில்லை.

பாண்டியன் தமிழ்ப்பற்றுக் காரணமாக தமிழ் மண்டபத்தை இடிக்கவில்லை.

8.  ஆசிரியர் மற்றும் ........................... கூடி மண்டபத்தை இடிக்காமல் காத்தனர்.

ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கூடி மண்டபத்தை இடிக்காமல் காத்தனர்.

9.  கல்வி, கேள்வியின் சிறப்பைப் பாடியவர் வழியில் வந்தவன் ....................... மன்னன்.

கல்வி, கேள்வியின் சிறப்பைப் பாடியவர் வழியில் வந்தவன் மாறவர்மன் சுந்தர பாண்டிய மன்னன்.

10.  பதினாறு கால் மண்டபம் ........................... மண்டபம் எனப்படுகிறது.

பதினாறு கால் மண்டபம் தமிழ் மண்டபம் எனப்படுகிறது.