தமிழ் மண்டபம்

தமிழ் மண்டபம்

பாடம்
Lesson


காட்சி - 1

இடம் : உறையூர் பதினாறு தூண்கள் கொண்ட மண்டபம்
காலம் : கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு
பங்கேற்போர் : ஆசிரியர், மாணவர்கள்

 
மாணவர்கள் : (நின்றபடி)
வணக்கம் ஐயா!
ஆசிரியர் : (வந்து கொண்டிருக்கிறார்)
வணக்கம் மாணவர்களே!
எல்லாரும் அமருங்கள்.
மாணவர்கள் : (அமர்கிறார்கள்)
நன்றி ஐயா!
ஆசிரியர் : தம்பி ! இனியன்! நீ எழுந்திரு!
வரிசையாக எண்களைச் சொல்லு!
மாணவர்கள் : ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து.
ஆசிரியர் : நிறுத்து! முல்லை நீ எழுந்திரு! தொடர்ந்து நீ சொல்!
முல்லை : பதினொன்று, பன்னிரண்டு, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு
ஆசிரியர் : நிறுத்து முல்லை! கண்ணன் நீ எழுந்திரு! பதினாறு - இந்த எண்ணைச் சொன்னால் உனக்கு என்ன நினைவுக்கு வருகிறது.
கண்ணன் : ஐயா! ஐயா!
பதினாறு செல்வங்கள் நினைவுக்கு வருகின்றன ஐயா!
ஆசிரியர் : நன்று!
பதினாறு பேறுகள்! அதில் இரண்டை நீயே சொல்லு!
கண்ணன் : கல்வி, புகழ்
ஆசிரியர் : நன்று தம்பி! அமர்ந்து கொள். ‘பதினாறு’ இந்த எண்ணைச் சொன்னால் வேறு என்ன நினைவுக்கு வருகிறது?
செல்வி : ஐயா! நாம் படிக்கும் பதினாறுகால் மண்டபம் நினைவுக்கு வருகிறது ஐயா!
ஆசிரியர் : நன்று! மிக நன்று!
செல்வி : ஐயா! ஒரு கேள்வி!
ஆசிரியர் : கேள் செல்வி!
செல்வி : இந்தப் பதினாறுகால் மண்டபம் எப்போது கட்டப் பட்டது ஐயா! கட்டியவர் யார் ஐயா?
ஆசிரியர் : நல்ல கேள்வி அம்மா! நல்ல கேள்வி!
இதற்கான பதிலைச் சொல்கிறேன்.
மணி...... எண்களை நிறுத்தாமல் நீதொடர்ந்து சொல்லி முடி!
மணி : பதினாறு, பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபது........
ஆசிரியர் : (சொல்லத் தொடங்குகிறார்).......
சங்க காலத்தில் கரிகால் பெருவளத்தான் என்ற சோழ மன்னன் இருந்தான். ஆட்சித் திறன், வீரம், கொடை முதலிய எல்லாப் பண்புகளிலும் அவன் சிறந்து இருந்தான். அப்போது ஒரு நாள்..... (காட்சி விரிகிறது)