தமிழ் மண்டபம்
பாடம்
Lesson
இடம் | : பதினாறு கால் மண்டபம் |
பங்கேற்போர் | : ஆசிரியர், மாணவர்கள் |
ஆசிரியர் | : அன்பு மாணவர்களே! அறிந்து கொண்டீர்களா? |
மாணவர்கள் | : ஆமாம் ஐயா! |
ஆசிரியர் | : பதினாறுகால் மண்டபத்தை மன்னன் கரிகாலன் அன்று கட்டினான் அல்லவா? அதே மண்டபம் தான் இது. கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்ற புலவருக்காக இந்த மண்டபம் கட்டித் தரப்பட்டது! |
மாணவர் 1 | : அப்படியா ஐயா! |
மாணவர் 2 | : இது தமிழுக்குக் கட்டித் தரப்பட்ட மண்டபம் ஐயா! |
மாணவர் 3 | :தமிழ்ப் புலவர் மண்டபத்தில் நாம் தமிழ்ப் பாடம் படிக்கிறோம்! ஆ! எவ்வளவு சிறப்பு! |
ஆசிரியர் | : ஆமாம் மாணவர்களே! வாழ்க தமிழ்! |