தமிழ் மண்டபம்
பயிற்சி - 3
Exercise 3
1. பாண்டிய மன்னன் பெயர் என்ன?
அ) கரிகாலன்
ஆ) கடியலூர் உருத்திரங்கண்ணனார்
இ) வீரபாண்டியன்
ஈ) மாறவர்மன் சுந்தர பாண்டியன்
ஈ) மாறவர்மன் சுந்தர பாண்டியன்
2. பதினாறு கால் மண்டபம் கட்டித் தந்தவன் யார்?
அ) கரிகாலன்
ஆ) நலங்கிள்ளி
இ) சோழன் நலங்கிள்ளி
ஈ) மாறவர்மன் சுந்தர பாண்டியன்
அ) கரிகாலன்
3. பதினாறு கால் மண்டபம் எப்புலவருக்காகக் கட்டப் பெற்றது?
அ) சீத்தலைச் சாத்தனார்
ஆ) மாங்குடி மருதனார்
இ) கடியலூர் உருத்திரங்கண்ணனார்
ஈ) ஒக்கூர் கிழார்
இ) கடியலூர் உருத்திரங்கண்ணனார்
4. பட்டினப்பாலை பாடிய புலவர் யார்?
அ) கபிலர்
ஆ) மாங்குடி மருதனார்
இ) கடியலூர் உருத்திரங்கண்ணனார்
ஈ) முடமோசியார்
இ) கடியலூர் உருத்திரங்கண்ணனார்
5. பதினாறு நூறாயிரம் பொன்னைத் தமிழ்ப் புலவர்க்குத் தந்தவன் யார்?
அ) கரிகாலன்
ஆ) பாண்டியன் நெடுஞ்செழியன்
இ) நெடுஞ்சோலாதன்
ஈ) மாறவர்மன் சுந்தர பாண்டியன்
அ) கரிகாலன்
6. பதினாறு கால் மண்டபத்தை இடிக்காமல் விட்டு விட்டவன் யார்?
அ) கரிகாலன்
ஆ) பொற்கைப் பாண்டியன்
இ) பாண்டியன் நெடுஞ்செழியன்
ஈ) மாறவர்மன் சுந்தர பாண்டியன்
ஈ) மாறவர்மன் சுந்தர பாண்டியன்
7. பதினாறு கால் மண்டபத்தில் பாடம் படித்தவர்கள் யார்?
அ) ஆசிரியர்
ஆ) மன்னர்
இ) புலவர்
ஈ) மாணவர்கள்
ஈ) மாணவர்கள்
8. பதினாறு கால் மண்டபத்தில் பாடம் சொல்லித் தந்தவர் யார்?
அ) ஆசிரியர்
ஆ) மன்னர்
இ) புலவர்
ஈ) மாணவர்கள்
அ) ஆசிரியர்
9. கரிகாலன் கட்டிய பதினாறுகால் மண்டபம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
அ) கல் மண்டபம்
ஆ) தமிழ் மண்டபம்
இ) புலவர் மண்டபம்
ஈ) ஆசிரியர் மண்டபம்
ஆ) தமிழ் மண்டபம்
10. பட்டினப்பாலை நூலில் போற்றப்பெறும் சோழ மன்னனின் பெயர் என்ன?
அ) கங்கைகொண்ட சோழன்
ஆ) சோழன் பெருங்கிள்ளி
இ) மனுநீதிச்சோழன்
ஈ) கரிகாலன்
ஈ) கரிகாலன்