தமிழ் மண்டபம்

தமிழ் மண்டபம்

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  நூறாயிரம் என்பது எவ்வளவு?

நூறாயிரம் என்பது ஒர் இலட்சம்.

2.  பதினாறு என்பதன் எண் வடிவத்தைத் தருக.

பதினாறு என்பதன் எண் வடிவம் 16.

3.  உருத்திரங்கண்ணனார் எந்த ஊரைச் சேர்ந்தவர்?

உருத்திரங்கண்ணனார் கடியலூரைச் சேர்ந்தவர்.

4.  உருத்திரங்கண்ணனார் எழுதிய நூல் எது?

உருத்திரங்கண்ணனார் எழுதிய நூல் பட்டினப்பாலை.

5.  இந்தப் பாடத்தில் இடம் பெறும் பாண்டியனின் பெயர் என்ன?

பாண்டியனின் பெயர் மாறவர்மன் சுந்தரபாண்டியன்

6.  கரிகாலன் புலவர்க்கு என்ன என்ன தந்தான்?

கரிகாலன் புலவர்க்குப் பதினாறு நூறு ஆயிரம் பொன், பதினாறு கால் மண்டபம் ஆகியவற்றைத் தந்தான்.

7.  தமிழ் மண்டபம் எது?

கரிகாலன் கட்டித்தந்த பதினாறு கால் மண்டபமே தமிழ் மண்டபம்.

8.  பதினாறுகால் மண்டபத்தில் என்ன நடைபெற்றது?

பதினாறுகால் மண்டபத்தில் தமிழ்ப் பள்ளிக்கூடம் நடைபெற்றது.

9.  தமிழ்ப்பள்ளிக் கூடத்தில் யார் யார் இருந்தனர்?

தமிழ்ப் பள்ளிக் கூடத்தில் ஆசிரியர், மாணவர்கள் இருந்தனர்.

10.  பதினாறுகால் மண்டபத்தைக் காப்பாற்றியவர்கள் யாவர்?

பதினாறுகால் மண்டபத்தைக் காப்பாற்றியவர்கள் ஆசிரியர், மாணவர்கள், மக்கள்.