தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Courses- தொகுப்புரை

  • 1.7 தொகுப்புரை

    இப்பாடத்தின் மூலம் பிற்காலப் பாண்டியர்கள் சோழர்களை வென்று அவர்களைத் தங்களுக்கு அடங்கி நடக்கும் சிற்றரசர்களாக்கி, அவர்களிடமிருந்து திறை வாங்கினார்கள் என்பது பற்றி விளக்கமாக அறிந்திருப்பீர்கள். பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் புகழில் மிகவும் ஓங்கியவன் என்பதை விளக்கமாக அறிந்திருப்பீர்கள். பிற்காலப் பாண்டியர் இறைநலமும் மக்கள் நலமும் கருதிச் செய்த அறப்பணிகளைப் பற்றி விரிவாகத் தெரிந்திருப்பீர்கள். பிற்காலப் பாண்டியர் அயல் நாட்டாருடன் கொண்ட வாணிகத்தொடர்பு பற்றியும், வெனிஸ் நாட்டுப் பயணியான மார்க்கோ போலோ என்பவனும், பாரசீக நாட்டு வரலாற்றாசிரியர் வாசாப் என்பவரும் இவர்களின் ஆட்சியின் போது தமிழகம் வந்து பல குறிப்புகளைத் தந்துள்ளனர் என்பது பற்றியும் இப்பாடத்தின் மூலம் படித்து உணர்ந்திருப்பீர்கள்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    மதுரையில் சுந்தரேசுவரர் கோயிலின் ஒன்பது நிலைக் கிழக்குக் கோபுரத்தைக் கட்டியவன் யார்?
    2.
    தில்லைத் திருக்கோயிலைப் பொன்னால் வேய்ந்த பாண்டிய மன்னன் யார்?
    3.
    முதலாம் மாறவர்மன் குலசேகரபாண்டியன் சீனாவிற்கு யாரைத் தூதுவராக அனுப்பி வைத்தான்?
    4.
    பாண்டிய நாட்டிற்குச் சீன நாடு அனுப்பி வைத்த தூதுவர் பெயர் என்ன?
    5.
    பாண்டிய நாட்டிற்கு வருகை புரிந்த வெனிஸ் நாட்டு வழிப்போக்கன் யார்?
    6.
    பாரசீக நாட்டைச் சார்ந்த வரலாற்றாசிரியர் யார்?
புதுப்பிக்கபட்ட நாள் : 27-07-2017 11:04:58(இந்திய நேரம்)