Primary tabs
- தன் மதிப்பீடு : விடைகள் - I
7. தனியன் என்றால் என்ன? இக்காலத்து எழுதப்பட்ட தனியன்கள் மூன்றினைக் கூறுக.
வைணவ ஆழ்வார்களைப் போற்றியும், பாசுரங்களைப் போற்றியும் எழுதப்பட்ட தனிப்பாடல் ‘தனியன்' ஆகும்.
ஆண்டாள் திருப்பாவைக்கு 2 தனியன்கள் - உய்யக்கொண்டார் பாடியது.
குலசேகரரது பெருமாள் திருமொழிக்கு 2 தனியன்கள்- மணக்கால் நம்பி பாடியது.
பேயாழ்வாரது 3ஆம் திருவந்தாதிக்கு 1 தனியன் - குருகை காவலப்பன் பாடியது என்பன.