Primary tabs
5.0 பாட முன்னுரை
நாட்டுப்புறவியல் ஆய்வில் களப்பணி (field work) என்பது உயிர்ப்பு மிகுந்த பணியாகும். "நல்ல தொடக்கம் பாதிப் பணி முடிந்தது" என்று கூறுவதைப் போல, நாட்டுப்புறவியல் வழக்காறுகளைப் படிக்கவும் ஆராய்ச்சி செய்யவும் முற்படும் பொழுது, அந்தந்தக் களத்திற்குச் சென்று தரவுகளைப் பெறுவது நடந்தால், அதுவே பாதிப் பணி முடிந்ததைப் போல எண்ண முடியும். இப்பாடப் பகுதி, நாட்டுப்புறவியல் வழக்காற்றில் - கள ஆய்வியல் என்னும் தலைப்பில் நாட்டுப்புறப் பாடல்களை மட்டுமே எடுத்துக் கொண்டு விளக்குகிறது.