Primary tabs
5.6 தொகுப்புரை
நாட்டுப்புறவியல் ஆய்வாளர் தனது ஆய்விற்கான தரவுகளைத் தகவலாளியிடமிருந்து பெறுவதற்குத் தாமே நேரடியாகக் களத்திற்குச் சென்று சேகரிக்கின்றார்.
களத்தினைத் தேர்ந்தெடுத்தல், உதவியாளரைத் தேர்ந்தெடுத்தல், களத்திற்குச் செல்வதற்கு முன்-பின் தான் கவனிக்க வேண்டியவை இவற்றை ஆய்வாளர் முன் கூட்டியே சரியாகத் திட்டமிட்டுக் கொள்கிறார்.
ஆய்வாளர் தரவுகளைச் சேகரிக்கக் கையாளும் அணுகுமுறைத் திறன் முக்கியமானது. அதற்காகப் பயன்படும் தொழில்நுட்பக் கருவிகளும், அவற்றின் பயனும் சொல்லப்பட்டுள்ளது.
கள ஆய்வினைத் திட்டமிட்டுத் தெளிவோடு நிறைவேற்றினால், ஆய்வாளர் தனது ஆய்வுப் பணியைச் சிறப்பாகச் செய்ய முடியும். இவ்வாறு கள ஆய்வு குறித்தும் தரவுகளின் சேகரிப்புக் குறித்தும் அறிந்து கொண்டு படிக்கத் தொடங்குங்கள்!